அவர் வாழ்க்கையிலேயே அவர் பார்த்த சிறந்த கிரிக்கெட் வீரர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தான் என கூறினார் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககரா. தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி 160 ரன் அடித்த பிறகு தான் இவரை பற்றி பேசினார் சங்ககரா.
29-வயதான விராட் கோலி தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அட்டகாசமாக சதம் அடித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தார். அந்த போட்டியில் அனைவரும் திணறும் போது, இந்திய அணியின் கேப்டன் அற்புதமாக விளையாடி அமர்க்கள படுத்தினார். இந்த ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளில் இரண்டு சதம் அடித்திருக்கிறார் கோலி.
“இது அற்புதமான முயற்சி. ரன் எப்படி அடிக்க வேண்டும் என்னும் கணக்கையும் அவர் தெரிந்து கொண்டார்,” என சங்ககரா கூறினார்.
“என் வாழ்க்கையிலேயே நான் பார்த்த சிறந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி தான். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கலக்கி வரும் கோலி, டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாட தொடங்கி விட்டார்,” என அவர் மேலும் கூறினார்.
அவரது பேட்டிங் திறமை அனைவரையும் மூச்சி திணற வைத்தது. அவர் இதுவரை விளையாடி இருக்கும் 205 ஒருநாள் போட்டிகளில் 34 சதங்கள் அடித்திருக்கிறார். கடந்த வருடம் மட்டும் அவர் அனைத்து விதமான போட்டிகளிலும் சேர்த்து 2818 ரன்கள் அடித்திருக்கிறார். 2017ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட்டர் வீரர் விருதையும் அவர் தட்டி சென்றார்.
இந்த வருடமும் விராட் கோலியிடம் இருந்து ரன் மழை பொழிய அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த ஆண்டின் ஒரே மாதத்தில் 6 போட்டிகளில் விளையாடி ( 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள்) 608 ரன் அடித்திருக்கிறார், அதில் 3 சதமும் அடங்கும்.