இந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேன் இந்திய வீரர் விராட் கோலி தான் என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் புகழ்ந்து தள்ளினார்.
ஒருநாள் மற்றும் டி20 பேட்ஸ்மேனுங்களுக்கான தரவரிசையில் முதல் இடத்திலும், டெஸ்ட் பேட்ஸ்மேனுக்கான தரவரிசையில் 5வது இடத்திலும் இருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.
சில நாட்களுக்கு முன்பு அனைத்து விதமான போட்டிகளிலும் சராசரி 50க்கு மேல் வைத்திருக்கும் ஒரே வீரர் விராட் கோலி தான் என்ற பெருமையை பெற்றார். தற்போது, டெஸ்ட் சராசரி 49.55, ஒருநாள் மற்றும் டி20 சராசரி 54.54 மற்றும் 52.96 ஆகும்.
டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பல சாதனைகளை முறியடித்து, பல சாதனைகளை செய்கிறார் விராட் கோலி. 192 ஒருநாள் போட்டிகளில் 28 சதம் அடித்திருக்கும் விராட் கோலி, அதிக ஒருநாள் சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார். கங்குலி, லாரா, ஜெயசூரியா போன்ற சிறந்த வீரர்கள் அனைவரும் கோலிக்கு பிறகு தான் உள்ளார்கள். சச்சின் மற்றும் பாண்டிங் மற்றும் தான் கோலி மேலே உள்ளார்கள்.
அவர் இருக்கும் பார்மில், வில்லியம்சன், ஸ்மித், ரூட் ஆகியோரை விட விராட் கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன். சாம்பியன்ஸ் டிராபி 2017இல் சிறப்பாக விளையாடிய ஹபீஸ், ட்விட்டரில் தனது ரசிகரிடம் விராட் கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறினார்.