2019-ல் அதிக வருமானம் ஈட்டும் முதல் 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலை அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் பத்திரிகை செவ்வாய்கிழமை வெளியிட்டது.
இதில் ஆர்ஜெண்டினா கால்பந்து அணியின் பிரபல நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி முதலிடம் பிடித்தார். ஊதியம் மற்றும் விளம்பரங்களின் மூலம் மட்டும் 127 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் ஈட்டுகிறார். இதன்மூலம் இந்தப் பட்டியலில் லயோனல் மெஸ்ஸி முதல்முறையாக முதலிடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சமகால கால்பந்து நட்சத்திரமான போர்ச்சுகல் அணியைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ 109 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானத்துடன் 2-ஆம் இடம் பெற்றார்.
மற்றொரு இளம் கால்பந்து நட்சத்திரமான பிரேஸில் அணியைச் சேர்ந்த நெய்மர் 105 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானத்துடன் 3-ஆவது இடத்தைப் பிடித்தார்.
முதல் 3 இடங்களில் கால்பந்து நட்சத்திரங்களின் ஆக்கிரமிப்புகளை அடுத்து 4-ஆவது இடத்தில் மெக்ஸிகோவைச் சேர்ந்த மிடில்வெயிட் குத்துச்சண்டை வீரர் சௌல் கேனலோ அல்வரீஸ் 94 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் பெறுகிறார். இவர் சமீபத்தில் பிரபல நிறுவனத்துடன் 365 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு 5 வருட ஒப்பந்தம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
5-ஆவது இடத்தில் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரர் உள்ளார். 20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஃபெடரரின் வருமானம் 93.4 அமெரிக்க டாலர்கள் ஆகும். இதில் பெரும்பகுதியாக விளம்பர ஒப்பந்தங்கள் மூலமாக மட்டும் 86 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் பெறுகிறார்.
டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் இந்த 100 பேர் பட்டியலில் இடம்பிடித்த ஒரே பெண்ணாக ஆவார். அவர் 29.2 மில்லியன் அமெரிக்க டாலர்களுடன் 63-ஆவது இடத்தில் உள்ளார்.

The third Test cricket match between India and Sri Lanka starts in Pallekele on August 12. / AFP PHOTO / LAKRUWAN WANNIARACHCHI (Photo credit should read LAKRUWAN WANNIARACHCHI/AFP/Getty Images)
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்களில் ஒரே இந்தியராக திகழ்கிறார். 25 மில்லியன் அமெரிக்க டாலர்களுடன் கடைசி இடமான 100-ஆவது இடத்தைப் பிடித்தார். விராட் கோலியின் ஊதியம் 4 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். ஆனால், விளம்பர ஒப்பந்தங்களின் மூலம் மட்டும் 21 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் ஈட்டுகிறார்.