டிவி-யில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியில் விராட் கோலியுடன் சேர்ந்து பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமீர் கானும் வரவுள்ளார். இதற்கு முன்பு விராட் கோலியை ரிலாக்ஸாக இருக்கும் உண்மையான நபர் என கூறினார் அமீர் கான்.
“அவருடன் பேசிக்கொண்டிருந்தது காமெடியாக இருந்தது. விராட் கோலி ஒரு உண்மையான நபர். என்ன ஒரு டான்சர் அவர்!” என அமீர் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்தார்.
அந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட்டர் விராட் கோலி மற்றும் தொகுப்பாளர் அபார்ஷக்தி குரானாவிடம் பஞ்சாப் டான்ஸை அமீர் கான் கற்றுக்கொள்ளும் படி காண்பிக்கப்பட்டது.
“இந்த தீவாளி சிறப்பு நிகழ்ச்சியில் இந்திய அணியின் இரண்டு நட்சத்திர வெடிகள் விராட் கோலி மற்றும் அமீர் கான் ஆகியோர் கலந்து கொள்ள போகிறார்கள். இவர்களை தொகுப்பது சந்தோசமாக இருக்கிறது,” என அபார்ஷக்தி குரானா கூறினார்.
பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமீர் கான் மற்றும் அபார்ஷக்தி குரானா ஆகியோர் ஏற்கனவே 2016-இல் ‘தங்கல்’ படத்தில் ஒன்றாக வேலை செய்திருக்கிறார்கள்.