தந்தையர் தினத்தை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பதிவிட்ட டிவிட்டில் அவரது தந்தை அவருக்கு கற்றுக்கொடுத்த முக்கிய பாடம் குறித்து கூறியுள்ளார்.
என் அப்பா இதை தான் கற்று தந்தார் – விராட் கோலி
உலகம் முழுவதும் கடந்த 16-ம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. இதையடுத்து அனைவரும் சமூக வலைதளங்களில் தங்கள் தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் மறைந்த அவரது தந்தை பிரேம் கோலிக்கு தந்தையர் தின வாழ்த்து தெரிவித்திருந்தார். அவர் தனது டுவிட்டரில் தந்தையுடன் சிறுவயதில் எடுத்துகொண்ட புகைப்படம் ஒன்றை பதிவு செய்திருந்தார்.
அதில், இந்த தந்தையர் தினம் மறக்கமுடியாத ஒரு நாளாகும், உங்கள் தந்தையுடன் இந்த தினத்தை சிறப்பானதாக ஆக்குங்கள், என பதிவிட்டிருந்தார். மேலும், ‘ஆரம்பத்தில் இருந்து கடினமாக உழைக்கவும், என் சொந்த கடின உழைப்பில் முழு நம்பிக்கை வேண்டும் எனவும், மற்றவர்களின் உதவிகளை எதிர்பார்க்க கூடாது என்பதையும் எனக்கு, அவர் கற்று கொடுத்தார். அந்த பாடம் இப்போது என் வாழ்வில் முக்கியமாகிவிட்டது. அவர் சரியான திசையில் என்னை வழிநடத்தினார். நன்றி அப்பா!’, எனவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 2006-ம் ஆண்டு விராட் கோலிக்கு 16 வயது இருக்கும் போது அவரது தந்தை மரணமடைந்தார். அந்த சமயத்தில் அவர் கர்நாடகா – டெல்லி இடையேயான ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடி கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
This Father's day do something memorable and make it special with your father. ? #HappyFathersDay #ComeOutAndPlay pic.twitter.com/amwaFOuqfB
— Virat Kohli (@imVkohli) June 17, 2018