உலகக்கோப்பை அணியில் சீனியர் வீரர்கள் இருக்க வேண்டும்: யோக்ராஜ் சிங் 1

2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை இந்திய அணியில் இளம் வீரர்கள் மட்டும் இருந்தால் போதாது அனுபவம் வாய்ந்த வீரர்களையும் விராட் கோலி சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது…

என்னுடைய மகன் தற்போது பிட்டாக இருக்கிறான். கடுமையாக உழைத்து வருகிறார். இன்னும் மூன்று முதல் நான்கு வருடங்களுக்கு அவனால் கிரிக்கெட் ஆட முடியும். வயது ஒரு தடையே இல்லை. மேலும் உலக கோப்பை போன்ற மிகப்பெரிய தொடரை இளம் வீரர்களை வைத்து மட்டுமே வெல்ல முடியாது. சவுரவ் கங்குலி இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது இந்திய அணியில் ஜூனியர் மற்றும் சீனியர் என்ற விகிதத்தை சரியாக கடைபிடித்தார். அதனால் தோனி ஒரு அற்புதமான அணியை தனக்கு எடுத்துக்கொண்டார் . கோலியும் கங்குலியை போன்ற சீனியர் வீரர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார் அவர்.உலகக்கோப்பை அணியில் சீனியர் வீரர்கள் இருக்க வேண்டும்: யோக்ராஜ் சிங் 2

ஆஸ்திரேலியா , நியூசிலாந்து ஒருநாள் தொடரில் ரிஷப் பண்ட் இல்லாவிட்டாலும் கண்டிப்பாக 2019 உலகக் கோப்பை அணியில் இருப்பார் என இந்திய கிரிக்கெட் வாரியத் தேர்வுக்குழு தலைவர்  பிரசாந்த் கூறியுள்ளார்.

இவர் 2019 உலகக் கோப்பை அணியில் விக்கெட் கீப்பர்களுள் ஒருவராக இடம்பெறுவது சந்தேகமில்லா உண்மையாகும். தற்போது உள்ள 3 விக்கெட் கீப்பர்களுமே அருமையாக தங்களது ஆட்டத்திறனை வெளிபடுத்தியுள்ளனர். எனவே மூன்று பேரும் உலக கோப்பை அணியில் கண்டிப்பாக இடம்பெறுவர். இதைத்தான் இந்திய அணி நிர்வாகமும் மற்றும் கேப்டன் விராட் கோலி-யும் விரும்புகிறார் என இந்தியா டுடே பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பிரசாந்த் கூறியுள்ளார்.

ரிஷப் பண்ட் தனது திறமையை ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் காண்பித்துள்ளார். உலகக்கோப்பை அணியில் சீனியர் வீரர்கள் இருக்க வேண்டும்: யோக்ராஜ் சிங் 3விக்கெட் கீப்பிங்கில் அதிக கேட்சுகள் மற்றும் பேட்டிங்கில் டெஸ்ட் தொடரில் அதிக ரன் அடித்தோர் பட்டியலில் இரண்டு அணியையும் சேர்த்து இரண்டாவது இடத்தையும் பிடித்து தனது ஆட்டத்திறனை நிருபித்துள்ளார். ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் , நியூசிலாந்திற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் அணியிலும் இடம்பெறவில்லை. தேர்வாளர்கள் எம்.எஸ். தோனியை ஒருநாள் தொடருக்கு விக்கெட் கீப்பராக அணியில் சேர்த்துள்ளனர்.

எம்.எஸ்.தோனியுடன் , தினேஷ் கார்த்திக் மற்றொரு விக்கெட் கீப்பராக ஓடிஐ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடர் ஜனவரி 12 அன்று தொடங்குகிறது. நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடர் ஜனவரி 23ஆம் நாள் தொடங்குகிறது

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *