கேன் வில்லியம்சன் ஒரு அபாரமான வீரர்: விராட் கோலி புகழாரக்!! 1

நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஒரு அபாரமான வீரர் என்று இந்திய கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது …

அவர் உலகின் ஒரு மிகச் சிறந்த வீரர்களில் ஒருவர் அவர் ஆட்டத்தை பார்க்க மிகவும் எளிதாக இருக்கும். கண்களுக்கு இனிதாக அமையும். அவரது ஆட்டத்தை பார்த்து நான் பலமுறை கொண்டாடுகின்றேன். தனிப்பட்ட விதமாக அவர் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் நியூசிலாந்து அணிக்காக பல போட்டிகளை வென்று கொடுத்து இருக்கிறார். அவர் ஒரு அற்புதமான வீரர் என்று கூறியுள்ளார் விராட் கோலி.

விராட் கோலிதான் ஒருநாள் கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி ஒருநாள் போட்டியில் 39 சதங்களுடன் 10,385 ரன்கள் குவித்துள்ளார். 59-க்கு மேல் சராசரி வைத்துள்ளார்.கேன் வில்லியம்சன் ஒரு அபாரமான வீரர்: விராட் கோலி புகழாரக்!! 2

219 போட்டிகளில் 39 சதங்கள் விளாசியுள்ள விராட் கோலிதான் ஒருநாள் போட்டியின் சிறந்த வீரர் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மைக்கேல் கிளார்க் கூறுகையில் ‘‘என்னை பொறுத்தவரையில் ஒருநாள் போட்டியில் எப்போதுமே விராட் கோலிதான் சிறந்த வீரர். இந்தியாவிற்காக அவர் செய்துள்ள சாதனைகளை பார்த்த பிறகு எனக்கு அதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்திய அணியின் வெற்றிக்காக அவர் காட்டிய பேரார்வத்திற்கு நாம் மதிப்பு அளிக்க வேண்டும். அவர் ஆக்ரோஷமான வீரர்தான். ஆனால் அவருடைய அர்ப்பணிப்பு, சாதனைகள் குறித்து கேள்வி எழுப்ப இயலாது. விராட் கோலி சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்’’ என்றார்.கேன் வில்லியம்சன் ஒரு அபாரமான வீரர்: விராட் கோலி புகழாரக்!! 3

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஆண்டுதோறும் சிறந்த வீரர்களை தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது. 2018-ம் ஆண்டுக்கான சிறந்த வீரர்களுக்கான விருதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்தது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி 3 ஐசிசி விருதுக்கு தேர்வாகி உள்ளார்.

அதேபோல் 2018-ல் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளது. இரண்டு அணிக்கும் விராட் கோலி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2018-ம் ஆண்டின் ஐசிசி டெஸ்ட் அணி (பேட்டிங் வரிசைப்படி):-

டாம் லாதம் (நியூசிலாந்து), கருணாரத்னே (இலங்கை), வில்லியம்சன் (நியூசிலாந்து), விராட் கோலி (இந்தியா- கேப்டன்), நிக்கோல்ஸ் (நியூசிலாந்து), ரிசப் பந்த் (இந்தியா- விக்கெட் கீப்பர்), ஹோல்டர் (வெஸ்ட்இண்டீஸ்), ரபாடா (தென்ஆப்பிரிக்கா), நாதன் லயன் (ஆஸ்திரேலியா), பும்ரா (இந்தியா), முகமது அப்பாஸ் (பாகிஸ்தான்).

ஐசிசி ஒரு நாள் போட்டி அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

ரோகித் சர்மா (இந்தியா), பேர்ஸ்டோவ் (இங்கிலாந்து), விராட் கோலி (இந்தியா-கேப்டன்). ஜோ ரூட் (இங்கிலாந்து), ராஸ் டெய்லர் (நியூசிலாந்து). பட்லர் (விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ் (இருவரும் இங்கிலாந்து), முஷ்டாபிஜூர் ரஹ்மான் (வங்காள தேசம்), ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்), குல்தீப் யாதவ், பும்ரா (இந்தியா).

விராட் கோலியை போலவே பும்ராவும் இரு அணியிலும் இடம் பெற்றுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *