இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெருவில் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் பங்கேற்கவில்லை. இந்தத் தொடரில் இவருக்குப் பதிலாக ரோகித் சர்மா கேப்டன் பதவியில் செயல்பட்டார். வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ள பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி மீண்டும் களமிறங்க உள்ளார். இதற்காக தற்போது இவர் இந்தூரில் உள்ளார்.
இந்நிலையில் விராட் கோலி தற்போது சிறுவர்களுடன் தெருவில் கிரிக்கெட் விளையாடி மகிழும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் விராட் கோலி சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிவிட்டு பின்னர் அவர்களிடம் பேட்டை கொடுக்காமல் ஓடும் வகையிலும் விளைட்டுக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இவர் ஒரு படப்பிடிப்பிற்காக இந்தூர் நகரின் பிச்சோலி மர்தானா (Bicholi Mardana) பகுதி சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடியது குறிப்பிடத்தக்கது. இதேபோல சில மாதங்களுக்கு முன்பு இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெருவில் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய வீடியோ மிகவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.
View this post on InstagramA post shared by ?? ? ? ? ? ? ? ? ? ? ? ?? (@shouvik.vkf) on
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர்- கேன்டிஸ் தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களது 2-வது மகள் 3½ வயதான இன்டி ரே தனது வீட்டில் கிரிக்கெட் மட்டையுடன் பேட்டிங் செய்வது போன்ற ஒரு வீடியோ காட்சியை கேன்டிஸ் இன்ட்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோவில், வார்னர் பந்தை எறிகிறார்.
பேட்டிங் செய்யும் இன்டி ரே, ஒவ்வொரு முறையும் ‘நான் விராட் கோலி’ என்று சொல்லியபடி பந்தை அடித்து விரட்டுகிறாள். இது குறித்து கேன்டிஸ் கூறுகையில், ‘எனது குட்டி மகள் இந்தியாவில் அதிக நேரத்தை செலவிட்டு இருக்கிறாள். அதன் தாக்கமோ என்னவோ விராட் கோலி போன்று ஆக விரும்புகிறாள்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
This little girl has spent too much time in India. Wants to be @imVkohli pic.twitter.com/Ozc0neN1Yv
— Candice Warner (@CandyFalzon) November 10, 2019