விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் திறனை பார்த்து, ரசிகர் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். இருப்பினும், விராட் கோலி தன்னுடைய இளம் ரசிகர் ஒருவரிடம் ஆட்டோகிராஃப் கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
“இருங்கள்! எனக்கு அவருடைய ஆட்டோகிராஃப் வேண்டும்,” இன்னொரு இளம் வீரர் தன்னிடம் ஆட்டோகிராஃப் கேட்ட போது விராட் கோலி இதை வீடியோவில் கூறினார். “இதை பாருங்கள்! அழகாக உள்ளது,” ஆட்டோகிராஃப் வாங்கிய பிறகு இந்தியன் கேப்டன் கூறினார். விராட் கோலியின் மனைவி, அனுஷ்கா ஷர்மா, இந்த வீடியோ முழுவதும் சிரிப்புடனே இருந்தார்.
“என்னுடைய ஏழு வயது உறவினர் மகன், முதல் டெஸ்ட்டின் போது ஜமைக்காவில் இருந்தார், அப்போது விராட் கோலியிடம் @imVkohli சென்று, “அதற்கு பதிலாக எனது ஆட்டோகிராப் விரும்புகிறீர்களா?” இதை கேட்ட விராட் கோலி நின்றார். உடன் அனுஷ்காவும் நின்றார்,” வீடியோவுக்கு கேப்ஷன் எழுதப்பட்டது.
My 7 year old nephew, who is in Jamaica for the first test , caught @imVkohli off-guard when he went up to him and told him "would you like my autograph instead?".Stopped in his tracks and indulged him. Anushka too.. ?? #kohli #ViratKohli #INDvsWI pic.twitter.com/9giCgJr3oB
— Amit Lakhani (@VeniVidiVici_08) September 2, 2019
உலக டெஸ்ட் தரவரிசையில் இருக்கும் இந்திய அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.
இந்த வெற்றி மூலம், தோனியின் 27 டெஸ்ட் வெற்றிகளை முறியடித்துள்ளார் விராட் கோலி.
இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தேசிய அளவில், தோனி தலைமையில் 60 டெஸ்ட் போட்டிகளில் 27 டெஸ்ட் போட்டிகளை வென்றுள்ளது இந்தியா.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான வெற்றிக்கு முன்பாக விராட் கோலி 26 டெஸ்ட் போட்டிகளை வென்றிருந்தார்.
இந்த வெற்றிக்கு பிறகு, வெளிநாடுகளில் கேப்டனாக கங்குலியின் வெற்றியை விராட் கோலி முறியடித்துள்ளார்.
கோலி , 28 டெஸ்ட் வெற்றிகளை பெற்றுள்ளார். நீண்ட ஓவர்கள் கொண்ட போட்டியில் இந்திய கேப்டனால் அதிக வெற்றி இதுவாகும்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி)இன்று வெளியிட்ட டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப்பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்திடம் ஒரு புள்ளியில் முதலிடத்தை பறிகொடுத்தார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.
ஆஸ்திரலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 904 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்திய அணியின் கேப்டன் கோலி 903 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.
மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சதம், அரைசதம் அடித்த அஜின்கயே ரஹானே 725 புள்ளிகளுடன் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்து 7-து இடத்தைப் பி்டித்தார்.
அதேபோல இந்திய பேட்ஸ்மேன் ஹனுமா விஹாரி மே.இதீவுகள் தொடரில் 289 ரன்கள் குவித்ததையடுத்து, 40 இடங்கள் முன்னேறி தரவரிசையில் 30-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார்.