இந்திய கேப்டன் விராட் கோலி ஒரு டாட்டூஸ் பிரியர். அவரது உடலில் ஏகப்பட்ட டாட்டூஸ் குத்தி வைத்துள்ளார். எல்லாமே அர்த்தம் பொதிந்தவை.
வெளிநாட்டு வீரர்கள்தான் அதிக அளவில் டாட்டூஸ் குத்தி வைத்து உடலையே பச்சையாக மாற்றி வைத்திருப்பது வழக்கம். இந்தப் பழக்கம் இப்போது நம்மவர்களையும் தொற்றிக் கொண்டுள்ளது. குறிப்பாக விராட் கோலி தனது உடலில் மொத்தம் 11 பச்சை குத்தி வைத்துள்ளார். எல்லாமே வித்தியாசமானவை.
முதலில் அவர் உடலில் குத்தப்பட்ட டாட்டூ என்னவென்றால் ஒரு பழங்குடியினர் கலை குறித்தது. அதன் பிறகு அவர் அடுத்தடுத்து மொத்தம் 11 டாட்டூஸ் குத்திக் கொண்டுள்ளார்.31 வயதாகும் விராட் கோலி பேட்டிங்கிலும், கேப்டன்சியிலும் கலக்கி வருபவர். லட்சக்கணக்கானோருக்கு ரோல் மாடலாக திகழ்பவர். அவரது பாடி டாட்டூஸ் பற்றி இங்கு விலாவாரியாக பார்ப்போமா.. ரொம்ப இன்டரஸ்டிங்கான பாடி டூராக இது அமையும். ஸோ ஜாலியா வேடிக்கை பார்க்கலாம் வாங்க. கடந்த 2018ம் ஆண்டுதான் நேஷனல் ஜியாகிராபி நிகழ்ச்சியில் தனது உடலில் இடம் பெற்றுள்ள டாட்டூஸ் குறித்துக் கூறியிருந்தார் கோலி.
விராட் கோலியின் உடலை அலங்கரிக்கும் முக்கியமான டாட்டூ மற்றும் முதல் டாட்டூ என்றால் அது இந்த பழங்குடியின ஓவியம்தான். இதையடுத்து தனது தாய் தந்தை (பிரேம் – சரோஜ்) ஆகியோரின் பெயர்களையும் டாட்டூ குத்தியுள்ளார் விராட் கோலி. அதேபோல எத்தனையாவது ஒரு நாள் போட்டி வீரர் மற்றும் டெஸ்ட் போட்டி வீரர் என்பதையும் டாட்டூ குத்தி வைத்துள்ளார். இந்தியாவின் 175வது ஒரு நாள் போட்டி வீரர் கோலி. அதேபோல டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர் 269வது இந்திய வீரர் ஆவார்.
விராட் கோரி விருச்சிக ராசிக்காரர். எனவே விருச்சிக ராசியின் சின்னமான தேள் சின்னத்தை தனது வலது தோள்பட்டையில் பொறித்துள்ளார். அதேபோல ஜப்பானின் சாமுராய் வீரன் படமும் அவரது உடலை அலங்கரிக்கிறது. இடது தோள்பட்டையில் அது உள்ளது. சாமுராய் வீரன் தன்னை மிகவும் கவர்ந்தவன் என்றும் தனக்கு உத்வேகம் கொடுப்பவன் என்றும் விராட் கோலி பலமுறை கூறியிருக்கிறார்.
அதேபோல கடவுளின் கண் என்று ஒரு டாட்டூ இருக்கிறது. நாம் செய்யும் எல்லாவற்றையும் கடவுள் பார்க்கிறார் என்பது நமது நம்பிக்கை. அது இந்தக் கண்தான் என்ற நம்பிக்கையில் இதை நான் டாட்டூவாக்கி இருக்கிறேன் என்று கூறியுள்ளார் கோலி. கடவுளின் பார்வையிலிருந்து யாரும் தப்ப முடியாது என்றும் விராட் கோலி அடித்துக் கூறுகிறார்.
2018ம் ஆண்டு இந்த ஓம் சிம்பலை பொறித்துக் கொண்டார் விராட் கோலி. ஓம் என்பது ஒரு சர்வதேசத்திற்கான ஒலி. நமது அண்டத்தின் ஒலி. எங்கு போனாலும் இது நம்முடன் இருக்கும். இது மாறாதது. நாம் அன்றாடம் கேட்கும் ஒலி. எனவே இதை டாட்டூவாக்கிக் கொண்டேன் என்பது கோலி தரும் விளக்கம். இதோபோல கடவுள் சிவன் டாட்டூவும் விராட் கோலி உடம்பை அலங்கரிக்கிறது.