நடு ரோட்டில் கட்டி அணைத்து முத்தமிட்டு கொண்ட கோஹ்லி – அனுஷ்கா சர்மா… வைரலாகும் புகைப்படம் !!

நடு ரோட்டில் கட்டி அணைத்து முத்தமிட்டு கொண்ட கோஹ்லி – அனுஷ்கா சர்மா… வைரலாகும் புகைப்படம்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோஹ்லி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகளில் காட்டு தீயாக பரவி வருகிறது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவு அணியுடன் மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் போது கோஹ்லியுடனே இருந்த அவரது மனைவி அனுஷ்கா சர்மா, பட ஷூட்டிங் காரணமாக தென் ஆப்ரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார்.

இதனையடுத்து நடைபெற்ற அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து கெத்து காட்டிய கோஹ்லி 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 5 போட்டியில் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்த கோஹ்லி, 6 போட்டிகளில் 578 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். ஒருநாள் தொடரின் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பேசிய கோஹ்லி, தனது இந்த முன்னேற்றத்துக்கு காரணம் தனது மனைவி அனுஷ்கா சர்மா தான் கூறியிருந்தார்.

இரு அணிகள் இடையேயான மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் துவங்கியுள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி நாளை நடைபெறுகிறது.

இந்நிலையில் தனது மனைவியுடனான புகைப்படத்தை ஒன்றொன்றாக வெளியிட்டு வரும் கோஹ்லி, இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோஹ்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கோஹ்லியும் அனுஷ்கா சர்மாவும் நடு ரோட்டில் கட்டியணைத்து முத்தமிட்டு கொள்ளும் புகைப்படம் இதுவரை கிட்டத்தட்ட 20 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது. 35 ஆயிரத்திற்கும் அதிகாமானோர் கமெண்ட் செய்து தொடர்ந்து இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

Mohamed:

This website uses cookies.