வீடியோ : கேப்டன் விராட் கோலி காயம், இன்று பேட்டிங் ஆடுவாரா?? 1

முதல் ஒருநாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா பேட்டிங்- ரகானே இடம் பிடித்தார்

இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் டர்பனில் தொடங்கியது.

டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் ரகானே இடம்பிடித்துள்ளார். மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், ஷ்ரேயாஸ் அய்யருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கேதர் ஜாதவ் அணியில் இடம்பிடித்துள்ளார்.

 

இந்த போட்டியில் அம்லா அடித்த பந்தை ஓடி எடுக்க சென்ற கேப்டன் கோலி சறுக்கி போய் பந்தை எடுத்தார். ஆனால் மைதானத்தில் நீர் ஊறி இருந்ததால் கோலியின் முட்டி மைதானத்தில் இருந்து புற்களை பேற்றுக் கொண்டு வந்தது. இதனால் கோலிக்கு சற்று நெருடல் ஏற்பட்டு மைதானத்தை விட்டு வெளியே சென்றார். மேலும், ரோகித் சர்மா அணியை வழிநடத்தினார். இதனால் இரண்டாவது இன்னிங்சில் விராட் பேட்டிங் பிடிப்பாரா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

https://twitter.com/iamkhurram12/status/959027433436413952

இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ரோகித் சர்மா, 2. தவான், 3. விராட் கோலி, 4. ரகானே, 5. டோனி, 6. கேதர் ஜாதவ், 7. ஹர்திக் பாண்டியா, 8. புவனேஸ்வர் குமார், 9. குல்தீப் யாதவ், 10. பும்ரா, 11. சாஹல்.

வீடியோ : கேப்டன் விராட் கோலி காயம், இன்று பேட்டிங் ஆடுவாரா?? 2

அதிரடி மன்னன் டி வில்லியர்ஸ் காயத்தால் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக ஏய்டன் மார்கிராம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. டி காக், 2. அம்லா, 3. டு பிளிசிஸ், 4. மார்கிராம், 5. டுமினி, 6. டேவிட் மில்லர், 7. கிறிஸ் மோரிஸ், 8. பெலுக்வாயோ, 9. ரபாடா, 10, மோர்கல், 11. இம்ரான் தாஹிர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *