கிரிக்கெட் ரசிகர்களுக்காக கிரிக்கெட் வேறு லெவலுக்கு செல்ல உள்ளது. கிரிக்கெட்டை வேறு லெவலுக்கு கூட்டி செல்ல புதிய தொடரை தொடங்கவுள்ளார்கள். கால்பந்து விளையாட்டு போல இந்த கிரிக்கெட் போட்டி 90 நிமிடம் தான் நடக்கும். இரண்டு அணியுமே தலா 10 ஓவர்கள் மட்டுமே விளையாடும். டி20 போட்டிகளால் ஏற்கனவே டெஸ்ட் போட்டிக்கு கூட்டம் குறைந்துவிட்டது. இப்போது 10 ஓவர் கிரிக்கெட் என்றால் சொல்லவே தேவையில்லை.
டிசம்பர் 21 – 24 வரை ஷார்ஜாவில் டி10 கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்கவுள்ளன.
இந்த தொடர் நடக்கவுள்ளதால் முன்னாள் நட்சத்திர வீரர்களை மீண்டும் பார்ப்பதில் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளார்கள். விரேந்தர் சேவாக் மற்றும் ஷாஹித் அப்ரிடி ஆகியோர் இந்த தொடரில் விளையாடவுள்ளதால் ரசிகர்களுக்கு ஒரே சந்தோஷம். ஆறு அணியிலும் ஒவ்வொரு நட்சத்திர வீரர் இடம்பெற்றுள்ளார்கள். விரேந்தர் சேவாக், ஷாஹித் அப்ரிடி, குமார் சங்ககரா, இயான் மோர்கன், கிறிஸ் கெய்ல் ஆகிய நட்சத்திர அதிரடி வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்கவுள்ளார்கள்.
போட்டியின் அமைப்பாளர்கள் விளையாட்டை புரட்சியை தேடுகிறார்கள், மேலும் விளையாட்டின் இடைவெளியைக் குறைப்பதன் மூலமும் பல பொழுதுபோக்கு புதுமைகளை செயல்படுத்துவதன் மூலமும் அதை அடைய விரும்புகிறார்கள். புதிய வடிவமைப்பை நியாயப்படுத்தும் வகையில், அமைப்பாளர்கள் தங்கள் வலைத்தளத்தின் மூலம் தெரிவித்தனர்,”பல கோடி கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் இந்த தொடருக்காக காத்திருக்கிறார்கள். கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து என அனைத்து சிறந்த விளையாட்டு போட்டிகளும் இனி 90 நிமிடங்களில் முடிந்துவிடும்.”