இங்கிலாந்து பாக்கிஸ்தான் அணிகள் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதின. அதில் முதல் போட்டியில் பாக்கிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாம் போட்டியில், இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்தது.
இந்த தொடரின் இரண்டாவது போட்டியின் போது ஜோஸ் பட்லர் பேட்டில் இருந்த வாசகம் பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கியது. அவரது பேட்டின் கைப்பிடி பகுதியில் ‘f*** it’ என எழுதியிருக்க மைதானத்தின் கேமராவில் தெல்ல தெளிவாக சிக்கிக்கொண்டார் ஜோஸ் பட்லர்.
இதுகுறித்து ஐசிசி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்த்த போது, ஐசிசி தெளிவாக விளக்கமளித்தது. ஐசிசி விதிப்படி, ஆடை மற்றும் இதர பொருட்களில் ஒரு சமூகத்தை தாக்கும் விதமாகவோ, ஒருகுறிப்பிட நபரை இழிவு படுத்தியோ, தவறான விஷயங்களை ஊக்குவிக்கும் விதமாகவோ இருக்க கூடாது. ஆனால் இது அவரின் தனிப்பட்ட கருத்து இதில் நடவடிக்கை எடுக்க ஏதும் இல்லை. இவை ஏற்றுக்கொள்ளும் விதமாகவே உள்ளது என தெரிவித்துள்ளது.
ஐசிசி இவ்வாறு தெரிவித்தது அனைவரையும் ஆச்சர்ய படுத்தும் விதமாகவே உள்ளது. இதற்கு பட்லர் பெருமூச்சு விட்டுள்ளார்.
இதுபற்றி பட்லர் கூறுகையில், ” நான் 18 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அணியில் இடம் பிடித்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் எனக்கு ஊக்கம் தேவை படுகிறது. இந்த வாசகம் என் மனநிலையை குறிக்கிறது. மைதானத்தின் நடுவில் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன், இது போதாது.. இன்னும் சிறப்பாக செயற்பட வேண்டும் என எனக்கு உணர்த்தும் விதமாகவே இதை எழுதினேன். யாரையாவது புண் படுத்தினால் என்னை மன்னித்து விடுங்கள்.” என தெளிவு படுத்தினார்.
27 வயதாகும் பட்லர், முதல் போட்டியில் அணியின் மோசமான தோல்வியிலிருந்து காப்பாற்றினார். அணி தொற்றிருந்த போதினும் 67 ரன்கள் குவித்தார். இரண்டாவது போட்டியில் ரூட் உடன் நல்ல பார்ட்னெர்ஷிப் அமைத்து அணியை நல்ல இலக்கை அடைய வழிவகுத்தார்.
மேலும் பட்லர், நான் அணியில் தொடர்ச்சியாக இடம் பிடிக்க போராடி வருகிறேன். முன்பைவிட நல்ல அனுபவம் பெற்றுள்ளேன். இன்னும் சிறப்பாக செயற்பட அதிக பயிற்சி செய்து வருகிறேன் என தெரிவித்தார்.