நியுஸிலாந்து அணியை தோற்கடிக்க சரியான யுக்தியை கூறிய விவிஎஸ் லட்சுமனன்! 1

போட்டியை நடத்தும் சொந்த அணிக்கு நெருக்கடியை உண்டாக்க வேண்டும் என்றால் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற வேண்டியது அவசியம் என லட்சுமண் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் வருகிற வெள்ளிக்கிழமை (21-ந்தேதி) வெலிங்டனில் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் நியூசிலாந்து மண்ணில் ஸ்விங், பவுன்சர், புதுப்பந்தை (New Ball) இந்திய பேட்ஸ்மேன்கள் எவ்வாறு எதிர்கொள்வார்கள் என்ற கேள்வியும் எழுகின்றன.

இந்நிலையில் கேம் பிளான் குறித்து லட்சுமண் விவரித்துள்ளார். இந்தியா ஆதிக்கம் செலுத்த அவர் கூறும் ஆலோசனை கீழ் வருமாறு:-நியுஸிலாந்து அணியை தோற்கடிக்க சரியான யுக்தியை கூறிய விவிஎஸ் லட்சுமனன்! 2

இளம் தொடக்க வீரர்களுக்கு மிகப்பெரிய சாவல் காத்திருக்கிறது. மயங்க் அகர்வால் ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடவில்லை. மேலும், இந்தியா ஏ அணிக்கெதிராக இரண்டு போட்டிகளிலும் விளையாடியுள்ளார். பிரித்வி ஷா அல்லது ஷுப்மான் கில் ஆகியோரில் ஒருவர் களம் இறங்க வாய்ப்புள்ளது. இருவருக்கும் அனுபவம் கிடையாது.

போட்டியை நடத்தும் அணியை அதன் சொந்த சூழ்நிலையில் நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டுமென்றால், முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் குவிக்க வேண்டும். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களின் புதுப்பந்து (New Ball) தாக்குதலை எப்படி தாக்குப்பிடிக்கிறோம் என்பது பொறுத்துதான் ரன்குவிப்பு அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.நியுஸிலாந்து அணியை தோற்கடிக்க சரியான யுக்தியை கூறிய விவிஎஸ் லட்சுமனன்! 3

இந்தியா உடனான டெஸ்ட் போட்டியில் கோலியை அவுட்டாக்கி தன்னுடைய திறனை சோதிப்பேன் என்று நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போல்ட், “தனிப்பட்ட முறையில் எனக்கு கிரிக்கெட் விளையாடுவது மிகவும் பிடிக்கும். அதிலும் விராட் கோலி போன்ற பேட்ஸ்மேனை இத்தொடரில் அவுட்டாக்கி எனது திறனை நானே சோதித்துக் கொள்வேன். ஆனால் கோலி ஒரு மிகச்சிறந்த வீரர். எல்லோருக்கும் தெரியும் அவர் எத்தகைய வீரரென்று” என்றார்.

image

மேலும் தொடர்ந்த போல்ட், “போட்டி நடைபெறவுள்ள பேசின் பார்க் மைதானம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமானது. காயத்திலிருந்து மீண்டு வர எனக்கு 6 வாரங்களே இருந்தது. ஆனாலும் கடுமையான பயிற்சிக்கு பின்பு இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தியாவுடனான போட்டி சவாலானதாக இருக்கும் என நினைக்கிறேன். ஒரு நல்ல டெஸ்ட் போட்டியை எதிர்பார்க்கலாம்.”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *