இந்தியாவுக்கு எதிராக போட்டியில் வாஹப் ரியாஸ் விளையாடுவது சந்தேகம்

ஜூன் 1 ஆம் தேதி மினி உலக கோப்பை என கூறப்படும் சாம்பியன்ஸ் டிராபி இங்கிலாந்தில் தொடங்கவுள்ளது. இதில், உலகின் டாப் 8 அணிகள் பங்கேற்கும்.

இந்நிலையில் அதிக ரசிகர்கள் ஜூன் 4ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்காக காத்து கொண்டிருக்கிறார்கள். இந்த போட்டியின் ஒவ்வொரு பந்தும் ஸ்வாரசியாக இருக்கும்.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் வாஹப் ரியாஸ் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.

2011 உலக கோப்பையில் அரையிறுதி போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஐந்து விக்கெட் எடுத்து பிரபலமானார். ஆனால், தற்போது முழங்கால் வலியால் அவதிப்பட்டு கொண்டிருக்கும் ரியாஸ் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடமாட்டார் என்று தெரிகிறது.

இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு பயிற்சியில் அனைத்து பாகிஸ்தான் வீரர்களும் ஈடுபட்டார்கள். ஆனால் வாஹப் ரியாஸ் பயிற்சியில் ஈடுபடவில்லை. பயிற்சி முடிந்த பிறகு ‘ஜிம்’-இல் இருந்தார்.

அப்படி, ரியாஸ் விளையாடவில்லை என்றால் பாகிஸ்தான் அணிக்கு தான் பின்னடைவு. முகமது அமீர் மற்றும் ஜுனைட் கான் ஆகிய இருவரும் ஐசிசி தொடர்களில் இந்தியாவுக்கு எதிராக விளையாடி இருக்கிறார் , ஆனால் அவர்கள் தற்போது பார்மில் இல்லாதது, மேலும் பின்னடைவாக கருத படுகிறது.

“சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியை நாங்கள் வீழ்த்திருக்கிறோம். முதலில் 2004இல் மற்றும் 2009-இல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில். இதனால், இந்த சாதனையை பராமரிக்க, இந்த வருட சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் வெற்றி பெறும்,” என முன்னால் பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிடி கூறியுள்ளார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.