ஐபிஎல் 2018 பிளே ஆஃப் நாக் அவுட் சுற்றில் கொல்கத்தா எடுத்த 169 ரன்களை விரட்டி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தாலும் 144 ரன் மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது ராஜஸ்தான் ராயல்ஸ்.
இடைப்பட்ட ஓவர்களில் கடும் சொதப்பல் பேட்டிங், காரணம் அஜிங்கிய ரஹானே. பிறகு பின்னியை கவுதமுக்கு முன்னால் இறக்கியது என்று ஏகப்பட்ட தவறுகளை ராஜஸ்தான் செய்தது.
கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ். அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஒவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 38 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். அதில் இரண்டு சிக்சர்களும், 4 பவுண்டர்களும் அடங்கும். கடைசியில் அதிரடியாக விளையாடிய ரசூல் 25 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்தார். அதில் 5 சிக்சர்களும், 3 பவுண்டர்களும் அடங்கும்.
அடுத்ததாக, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஒவரில் 4 விக்கெட் இழந்து 144 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. அதிகபட்சமாக சாம்சன் 50 ரன்கள் சேர்த்தார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் நம்பிக்கை அறிவுரையாளர் ஷேன் வார்ன் தன் ட்விட்டரில் கூறியதாவது:
என்னவொரு ஏமாற்றமான முடிவு இது. ஏகப்பட்ட பந்துகள் விரயம் செய்யப்பட்டன. இடைப்பட்ட ஓவர்களில் அடித்து ஆடி ஆட்டத்தை வெற்றியை நோக்கி இட்டுச் சென்றிருக்க வேண்டும்.
இந்த ஆட்டம் நாம் வெற்றி பெற வேண்டிய ஆட்டம், இலக்கைக் கடந்து வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
ஆனாலும் ஒட்டுமொத்த அணி குறித்தும் பெருமையடைகிறேம் அவர்கள் சிறப்பான முயற்சிக்கு பாராட்டுக்கள். இந்தப் போட்டியில் வென்றிருக்க வேண்டும், தோல்வி காயப்படுத்துகிறது.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்
“5 வருடங்களுக்கு யார் ஆட்சி செய்தாலும், முடிந்தவரைக்கும் அவருக்கு ஒத்துழையுங்கள்” – விஜய் ஆண்டனி