நான் இன்னமும் கெத்தான குதிரை தான்.. 5 மாசமா ஒரு போட்டிக்கூட ஆடாம இருந்தாலும், முதல் இன்னிங்சிலேயே 5 விக்கெட் அள்ளியது எப்படி? – ஜடேஜா பேட்டி!

நான் இன்னமும் கெத்தான குதிரை தான்.. 5 மாசமா ஒரு போட்டிக்கூட ஆடாம இருந்தாலும், முதல் இன்னிங்சிலேயே 5 விக்கெட் அள்ளியது எப்படி? - ஜடேஜா பேட்டி! 4நான் இன்னமும் கெத்தான குதிரை தான்.. 5 மாசமா ஒரு போட்டிக்கூட ஆடாம இருந்தாலும், முதல் இன்னிங்சிலேயே 5 விக்கெட் அள்ளியது எப்படி? - ஜடேஜா பேட்டி! 4

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு, காயம் ஏற்பட்டபோது செய்து வந்த பயிற்சிகளை பற்றி பேசியுள்ளார் ரவீந்திர ஜடேஜா.

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது ஆஸ்திரேலிய அணி.

ஸ்மித் 37, லபுஜானே 49 ரன்கள் அடித்து சிறிய நம்பிக்கை கொடுத்தாலும், அலெக்ஸ் கேரி 36 ரன்கள் அடிக்க, 150 ரன்களை கடந்தது ஆஸி., அணி. பின்னர் வந்தவர்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேற, முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ரவீந்திர ஜடேஜா, காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியில் இருந்தார். கிட்டத்தட்ட 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சர்வதேச போட்டிகளில் ஆடுகிறார். ஆடிய முதல் போட்டியிலேயே ஐந்து விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

போட்டி முடிந்தபின், காயம் அடைந்தபோது இருந்த மனநிலை மற்றும் அப்போது எடுத்த பயிற்சிகள் குறித்து பேசியுள்ளார் ரவீந்திர ஜடேஜா. அவர் பேசியதாவது:

“பெங்களூருவில் உள்ள இந்திய தேசிய அகடமியில் நான் இருந்தபோது, இடைவிடாமல் 10-12 மணி நேரம் பவுலிங் பயிற்சி செய்து வந்தேன். இதுதான் எனக்கு மிகவும் உதவியது என்றே கூறலாம். எனது இயல்பான பவுலிங் மீண்டும் கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் கவனத்துடன் பயிற்சி செய்தேன். ஏனெனில் மீண்டும் நான் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும், விளையாடுவேன் மற்றும் அதிக ஓவர்கள் பந்து வீசுவேன் என்று உறுதியுடன் இருந்தேன்.” என்றார்.

5 விக்கெட்டுகள் குறித்து பேசிய ஜடேஜா, “முதல் இன்னிங்சில் நான் விளையாடிய விதம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என்ஜாய் செய்தேன். ஐந்து மாதங்கள் கழித்து சர்வதேச போட்டிகளில் விளையாடுவது என்பது எளிதானது அல்ல. ஆனாலும் நான் அதற்காக தயாராக இருந்தேன் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று முனைப்புடன் பயிற்சி செய்து வந்தேன். அனைத்தும் எனக்கு நன்றாக வெளிப்பட்டது மகிழ்ச்சியை கொடுக்கிறது.” என்றார்.

அதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா அரைசதம் அடிக்க ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் முதல் நாள் முடிவில் இந்திய அணி எடுத்திருந்தது. தற்போது வரை ஆஸ்திரேலியா அணியை விட 100 ரன்கள் பின்தங்கியுள்ளது.

 

Mohamed:
whatsapp
line