ரிவர்ஸ் ஸ்விங் ஒரு கலை! வெற்றிக்காக ஏமாற்றி வரவைப்பது முட்டாள்தனம் 1

கிரிக்கெட்டில் ரிவர்ஸ் ஸ்விங் பந்துவீசுவது என்பது ஒரு கலையாகும். பந்தை சேதப்படுத்திதான் அதை வீசுகிறோம், ஏமாற்றுத்தனம் என்று கூறுவது முட்டாள்தனமானது என்பது பாகிஸ்தான் ரிவர்ஸ் ஸ்விங் பிதாமகன் சர்பிராஸ் நவாஸ் சாடியுள்ளார்.

ரிவர்ஸ் ஸ்விங் சுல்தான்(ராஜா) என்று அழைக்கப்படும் இம்ரான் கான், வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ் ஆகியோருக்கு ரிவர்ஸ் ஸ்விங் கலையை கற்றுக்கொடுத்தவர் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் சர்பிராஸ் நவாஸ் என்பது அனைவரும் அறிந்த விஷயமாகும்.

sarfraz nawaz க்கான பட முடிவு

சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் ரிவர்ஸ் ஸ்விங் வீசுவதற்காக பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய வீரர்கள் கேமரூன் பான்கிராப்ட், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் தெரிவித்தனர்.

பந்தை சேதப்படுத்திய குற்றத்துக்காக டேவிட் வார்னர், ஸ்மித் ஆகியோருக்கு 12 மாதங்கள் தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாத தடையும் விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானின் இணையதளங்கள், சமூக ஊடகங்களில் ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்தி சிக்கிக்கொண்டதையும், பாகிஸ்தான் வீரர்களோடும் ஒப்பிட்டு மீம்ஸ் உருவாக்கி கிண்டல் செய்து வருகின்றனர்.

அதாவது பந்தை சேதப்படுத்தி ரிவர்ஸ் ஸ்விங் பந்துவீசுவதில் எங்களின் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், இம்ரான் கான் கில்லாடிகள், ஆனால், ஆஸ்திரேலிய வீர்ர்கள் பந்தை சேதப்படுத்தும் கலையை கற்பதில் கற்றுக்குட்டிகள், அனுபவமில்லாதவர்கள் என்ற ரீதியில் அந்த மீம்ஸ் இடம் பெற்றுள்ளது.ரிவர்ஸ் ஸ்விங் ஒரு கலை! வெற்றிக்காக ஏமாற்றி வரவைப்பது முட்டாள்தனம் 2

இதனால், பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் கூட ரிவர்ஸ் ஸ்விங் பந்துவீச்சு என்பது, பந்தைசேதப்படுத்தினால் மட்டுமே வீசமுடியும் என்ற நிலைப்பாடு இருக்கிறது.

இதுபோன்ற தவறான சிந்தனையை அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரரும், ரிவர்ஸ் ஸ்விங்கில் பிதாமகனுமான சர்பிராஸ் நவாஸ் கடுமையாகச் சாடியுள்ளார். கராச்சியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

வேப்பந்துவீச்சாளர்கள் ரிவர்ஸ் ஸ்விங் வீச வேண்டுமானால், பந்தை சேதப்படுத்திதான் வீசுகிறார்கள் என்ற தவறான கருத்து நிலவுகிறது. இது முட்டாள்தானமாது. மூடத்தனமாக இப்படி பேசக்கூடாது.

sarfraz nawaz க்கான பட முடிவுரிவர்ஸ் ஸ்விங் என்பது ஒரு கலை, ரிவர்ஸ் ஸ்விங் என்பது ஏமாற்றுவேலை அல்ல. இதை பந்தை சேதப்படுத்தாமல் வீச முடியும். புதிய பந்திலும், ரிவர்ஸ் ஸ்விங் வீச முடியும், பந்து தேய்ந்தபின் பழைய பந்திலும் ரிவர்ஸ் ஸ்விங்க் வீச முடியும் என்று ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரிவர்ஸ் ஸ்விங் என்பது ஒருசிறிய அறிவியலோடு தொடர்புடையது.

நான் ரிவர்ஸ் ஸ்விங் கலையை இம்ரான் கானுக்கு நான் கற்றுக்கொடுத்தேன். அவர் வாசிம் அக்ரமுக்கும், வக்கார் யூனுசுக்கும் கற்றுக்கொடுத்தார். எல்லோரும் அந்த நேரத்தில் ரிவர்ஸ் ஸ்விங்கை ஒரு ஏமாற்றுவேலை என்றார்கள், ஆனால், இங்கிலாந்து வீரர்கள் மட்டுமே ரிவர்ஸ் ஸ்விங் ஒரு கலை என்றனர்.

ரிவர்ஸ் ஸ்விங் ஒரு கலை! வெற்றிக்காக ஏமாற்றி வரவைப்பது முட்டாள்தனம் 3
This video grab taken from a footage released by AFP TV shows Australia’s captain Steve Smith (R), flankled by teammate Cameron Bancroft, speaking during a press conference

ரிவர்ஸ் ஸ்விங் இன்னும் ஒரு கலையாகவே மதிக்கப்படுகிறது. ஆனால், ஒரு அணியை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக பந்தை சேதப்படுத்துவது என்பது ஏமாற்றுத்தனமாகும். அந்த வகையில் தென் ஆப்பிரிக்காவை ஏமாற்றுவதற்காக ஆஸ்திரேலிய வீரர்கள் செய்த செயலுக்கு தண்டனையை அனுபவித்து வருகிறார்கள்.

வழக்கமான ஸ்விங்க் என்பது மிகவும் எளிமையானது. அதாவது, வேகப்பந்துவீச்சாளர் ஸ்லிப் திசையை நோக்கி, வலதுகை பேட்ஸ்மேனுக்கு பந்தை ஸ்விங் செய்வது ஒருவகை, அதேசமயம், லெக்சைட் நோக்கி பந்தை ஸ்விங் செய்வது ஒருவகையாகும். ஆனால், இவை இரண்டிலும் இருந்து முற்றிலும் வேறுபட்டது ரிவர்ஸ் ஸ்விங்.

இவ்வாறு சர்பிராஸ் தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *