டெஸ்ட் போட்டிகளில் ராகுலுக்கு பதில் இவரை களமிறக்குங்கள்: முன்னால் வீரர் கடுப்பு 1

கே.எல்.ராகுலின் ஃபார்ம் மோசமாக உள்ளது என பல முன்னாள் வீரர்கள் விமர்சித்துள்ளனர். முன்னாள் கேப்டன் கங்குலி, கே.எல்.ராகுலை துவக்க வீரரில் இருந்து மாற்றுமாறு கூறியுள்ளார். இந்நிலையில் முன்னாள் துவக்க வீரர் வாசிம் ஜாபர், “ராகுல் துவக்க வீரராக தனது இடத்தை தக்க வைக்க முடியாமல் தவித்து வருகிறார்” என்று கூறியுள்ளார். சமீபத்தில் நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நான்கு இன்னிங்ஸிலும் சேர்த்து 101 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். அவரது சராசரி 25.25 உள்ளது.

மேலும், “ராகுல் தடுமாறுகிறார். அவர் சிறந்த வீரர் தான் . இந்தியாவுக்காக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சதமடித்தவர்” என்றார்.

டெஸ்ட் போட்டிகளில் ராகுலுக்கு பதில் இவரை களமிறக்குங்கள்: முன்னால் வீரர் கடுப்பு 2
Jason Holder, Captain of the West Indies celebrates the wicket of K. L. Rahul of India on day one of the second test match between the West Indies and India held at the Sabina Park, Jamaica on the 30th August 2019 Photo by Ron Gaunt / SPORTZPICS for BCCI

ராகுலின் ஃபார்ம் அவரது இடத்தை அணியில் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. அவரது சராசரி கவலையளிக்கும் விதமாக 36.82 என்ற நிலையில் உள்ளது .

“அவர் ஆட்டமிழக்கும் முறைகள் மிகவும் எளிமையாக உள்ளது. அவர் ஆட்டமிழக்கும் ஷாட்கள் எனக்கு கவலையளிக்கிறது” என்றார் ஜாபர்.

ராகுல் இதனை சமாளிக்க மனதளவில் தயாராக வேண்டும் என்று கூறிய அவர், ராகுல் முதல்தர போட்டிகளில் அதிக கவனம் எடுத்து ஆடவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

ஜாபர், இந்திய அணிக்காக 31 டெஸ்ட் மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் ராகுலுக்கு பதில் இவரை களமிறக்குங்கள்: முன்னால் வீரர் கடுப்பு 3
PERTH, AUSTRALIA – DECEMBER 15: Lokesh Rahul of India is bowled by Josh Hazlewood of Australia during day two of the second match in the Test series between Australia and India at Perth Stadium on December 15, 2018 in Perth, Australia. (Photo by Ryan Pierse/Getty Images)

“அவரது நுட்பமான அணுகுமுறையில் சிக்கலில்லை. ஆனால் மனதளவில் இன்னும் தன்னை வலிமையாக்கிக் கொள்ள வேண்டும்” என்றார்.

“ரோஹித் ஷர்மாவை துவக்க வீரராக்கலாம் என்ற முடிவுக்கு ஒருநாள் போட்டிகளில் அசைக்க முடியாத வீரராக இருக்கும் ரோஹித்தை முயற்சித்து பார்ப்பதில் தவறில்லை” என்றார்.

மேற்கிந்திய தீவுகளுடனான ஆட்டம் தவிர்த்து, இதே போக்கை இந்தியாவிலும் கடைபிடிக்க வேண்டும் என்று இந்திய அணிக்கு அறிவுறை வழங்கினார்.

டெஸ்ட் போட்டிகளில் ராகுலுக்கு பதில் இவரை களமிறக்குங்கள்: முன்னால் வீரர் கடுப்பு 4
Rohit Sharma lunges low to sweep one square , India v Sri Lanka, 3rd Test, Delhi, 2nd day, December 3, 2017
©BCCI

மேலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்திலும் ஆதிக்கத்தை இந்தியா செலுத்த வேண்டும் என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *