நேற்று நடந்த தமிழ்நாடு ப்ரீமியர் லீகின் முதல் க்வாலிஃபய்ரில் சேப்பாக் அணியும் தூத்துக்குடி அணியும் மோதின. இந்த போட்டியில் தான் 17 வயதேயான வாசிங்க்டன் சுந்தர் பேயடி அடித்து 15 பந்தில் அரை சதம் கண்டார். ஆனால் , பார்க்க மிகவும் சாதாரணமாக தான் இருந்த்தது அவர் ஆடிய அந்த அற்புதமான இன்னின்ஸ்.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங்க் செய்த சேப்பாக் அணி 20வது ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 114 ரங்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் கார்த்திக் 33 ரன்கள் அடித்தார். அபாரமாக பந்து வீசிய தூத்துக்குடி அணியின் அதிசயராஜ் 4 ஓவர்கல் வீசி 25 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அற்புதமாக செயல்பட்ட வாசிங்டன் சுந்தரும் 3 ஓவர்கள் வீசி 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை சாய்த்தார். இதில் ஒரு மெயட்ன் ஓவரும் அடங்கும்.
பின்னர் 115 என்ற எளிதான இழக்குடன் களம் கண்டதூத்துக்குடி அணி தொடக்க முதலே விளாச தொடங்கியது. அதற்க்கு காரணம் வாசிங்டன் சுந்தர் ஆவார். தொடக்க முதலே எதிரணி பந்து வீச்சை துவம்சம் செய்ய துவங்கினார் வாசிங்டன் சுந்தர்.முதல் ஓவரே யோ மகேஷ் வீச, அதை ஒரு காட்டு காட்டி 22 ரன்கள் விளாசினார் சுந்தர்.
பின்னர் அடுத்தடுத்து வந்த பந்து வீச்சளர்களையும் காலி செய்த சுந்தர். வெரும் 15 பந்தில் அதிரடியாக அரை சதம் கண்டார்.
அவர் ஆடிய முதல் 15 பந்துகள் கீழே :
0, 4, 0, 6, 6, 6, 2, 1, 1, 5, 6, 4 ,2, 4, 4,
இந்த அதிரடியின் காரணமாக 115 என்ற எளிதான இலக்கை 12.3 ஒவர்களில் அசட்டையாக அடித்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டி.என்.பி.எல் 2.0 வின் இறுதி போட்டிக்குள் நுழைந்தது தூத்துக்குடி அணி. சுந்தர் 36 பந்துகளில் 72 ரன்கள் விளாசினார். அதில் 4 சிக்சர்கள் மற்றும் 8 ஃபோர்களும் அடங்கும். முன்னதாதக பந்து வீச்சிலும் அசத்திய சுந்தர் 3 ஓவர்கள் 3 விக்கெட் வீழ்த்தி 1 மெய்டனும் போட்டுள்ளார். இதன் காரணமாக ஆட்ட நாயகள் விருதையும் தட்டிச்சென்றார் சுந்தர்.
மேலும் இத் தொடரில் அதிக ரன் அடித்தவர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார் சுந்தர். 7 போடிகளில் 445 ரன்களை குவித்துள்ளார். மேலும் அவர் தான் அதிக விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 7 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை சாய்த்து முதல் இடத்தில் உள்ளது குறிபிடத்தக்கது. மேலும் தூத்துக்குடி அணி இது வரை ஆடிய ஏழு போட்டிகளிலும் தொடந்து வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
போன வருடம் நடந்த டி.என்.பி.எல் முதல் தொடரில் தூத்துக்குடி அணி தான் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த பதிப்பிலும் கோப்பையை வெல்லும் முனைப்புடன் இறுதிப்போட்டியில் களம் காணும்.