தென்னாபிரிக்கா அணியின் அட்டகாச வீரர் ஏபி டி வில்லியர்ஸ் காயங்கள் காரணமாக இந்த வருடம் பல போட்டிகளில் விளையாடவில்லை, அது மட்டும் இல்லாமல் தானே டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகி கொண்டார். அவர் விளையாடாமல் இருக்கும் போது, பல பந்துவீச்சாளர்கள் தெனாவட்டாளாக இருந்தார்கள். மீண்டும் அவர்களுக்கு பயத்தை காண்பிக்க வந்தார் அதிரடி வீரர் ஏபி டி வில்லியர்ஸ்
தற்போது, தென்னாபிரிக்காவில் ரேம் ஸ்லாம் டி20 தொடர் நடந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 12) அன்று அந்த டி20 தொடரில் டைட்டன்ஸ் மற்றும் ஐவெல்டு லயன்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் டி வில்லியர்ஸ் எதிரணியை பந்தாடி விட்டார்.
முதலில் பேட்டிங் விளையாடிய லயன்ஸ் அணி 15 ஓவரில் 6 விக்கெட் இழந்து 127 ரன் இருக்கும் போது மழை குறுக்கிட்டது. இதனால், போட்டியை 15 ஓவராக மாற்றினார்கள். முதல் ஓவரிலேயே ரசி வேன் டெர் டுசென் மற்றும் மங்கலிசோ மோசேலே ஆகியோரை அவுட் ஆக்கி வெளியே அனுப்பினார் ஆல்பி மோர்கெல். ஆனால், ரீசா ஹென்றிக்ஸ் 42 பந்துகளில் 67 ரன் அடித்து, அணிக்கு ஒரு நல்ல ஸ்கோரை அடித்து கொடுத்தார். அவரது இன்னிங்சில் எட்டு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர் அடித்தார் ஹென்றிக்ஸ், பிறகு மழை குறுக்கிட்டது.
டக்-ஒர்த் லெவிஸ் முறை படி டைட்டன்ஸ் அணிக்கு 15 ஓவரில் 135 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நிர்ணயித்தார்கள். ஆனால், அட்டகாசமாக விளையாடிய டைட்டன்ஸ் அணி 11.2 ஓவரில் அந்த இலக்கை எட்டி வெற்றி பெற்றது. தொடக்கத்தில் ஹென்றி டேவிட்ஸ சொற்ப ரன்னில் அவுட் ஆக, 24 பந்தில் 39 ரன் அடித்து ஒரு நல்ல தொடக்கத்தை தந்தார் டி காக். அதன் பிறகு வந்த ஆல்பி மோர்கெல் மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோர் எதிரணி பந்துவீச்சை நாலாப்பக்கத்தும் விளாசினார். மோர்கெல் 16 பந்தில் 41 ரன் அடிக்க, 19 பந்தில் அரைசதம் அடித்து அவருடைய அதிவேக டி20 அரைசதத்தை பூர்த்தி செய்தார் டி வில்லியர்ஸ்.
அவருடைய தென்னாபிரிக்கா வீரர் காகிஸோ ரபாடா ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்ஸர் அடித்து அவரும் அரைசதம் அடிக்க, அணிக்கும் வெற்றியை வாங்கி தந்தார் அட்டகாச வீரர் ஏபி டி வில்லியர்ஸ்.
டி வில்லியர்ஸின் அதிரடி ஆட்டத்தை பாருங்கள்: