கிரிக்கெட்டை ரசிக்கும் நாட்டில் நீங்கள் ஒரு நட்சத்திர கிரிக்கெட் வீரராக இருந்தால், கண்டிப்பாக நீங்கள் போகும் இடம் எல்லாம் ரசிகர்கள் கூட்டம் நெரிசலை ஏற்படுத்துவதால், கண்டிப்பாக கடுப்பாகும். நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் செல்லும் இடம் எல்லாம் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து, அவர்களுடன் செல்பி எடுக்க ரசிகர்கள் நினைப்பார்கள்.
இருந்தாலும் பல கிரிக்கெட் ரசிகர்கள் கோபமாக இருந்தாலும், அதை வெளியே காட்டி கொள்ளாமல் ரசிகர்களுடன் நின்று சிரித்து கொண்டு செல்பி எடுப்பார்கள். ஆனால், இந்திய அணியின் தொடக்கவீரர் ஷிகர் தவானின் சமீபத்திய வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
புது டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஷிகர் தவான் சென்ற போது ஒரு சம்பவம் நடந்தது. அந்த இடத்திற்கு ஷிகர் தவான் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, அவரது ரசிகர்கள் செல்பி எடுக்க அருகே வந்தார்கள். ரசிகர்கள் கூட்ட நெரிசல் அதிகம் ஆனதால், கோபமடைந்த ஷிகர் தவான் ரசிகரை தள்ளிவிட்டார். அதன் பிறகு அவருடன் இருந்த காவலர்கள் அவரை சமாதான படுத்தினார்கள்.
அந்த வீடியோவை பாருங்கள்:
தனது சகோதரியின் திருமணத்திற்காக சென்றிருந்த ஷிகர் தவான், இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் தொடருக்கு இந்திய அணியுடன் சேர்ந்துவிட்டார். முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அவர் சொதப்பினாலும், இரண்டாவது இன்னிங்சில் 94 ரன் அடித்து அசத்தினார்.