பங்களாதேஷ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கே.எல்.ராகுல், தோனி அசத்தலாக விளையாடி சதம் அடித்தனர்.
உலகக் கோப்பையின் 10வது பயிற்சிப் போட்டி இன்று இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையே நடைபெற்று வருகிறது. வேல்ஸ் நாட்டில் உள்ள சோபியா கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான் ஒரு ரன்னில் ஏமாற்றினார். சற்று நேரம் தாக்குப்பிடித்த ரோகித் சர்மாவும் 19 ரன்னில் நடையைக் கட்டினார்.
தொடக்கத்தில் ரோஹித் சர்மா, ஷிகர் தவன் சொதப்பினர், தவண் வெளியே ஸ்விங் ஆகும் பந்தின் தன் பலவீனத்தை மறைக்க காலை நன்றாக முன்னால் தூக்கி முன் கூட்டியே போட உள்ளே வந்த முஸ்தபிசுர் பந்தை அவரால் ஒன்றும் செய்ய முடியாமல் எல்.பி.ஆகி வெளியேறினார். ரோஹித் சர்மா அடிக்க வேண்டிய பந்துகளைக் கூட அடிக்காமல் சோம்பேறித் தனமாக டிபன்ஸ் ஆடிக்கொண்டிருந்தார். கோலி, ராகுல் இணைந்து நிலைப்படுத்தினர்.
விஜய் சங்கர் 2 ரன்களில் ஆட்டமிழந்து சொதப்ப இந்திய அணி 22 ஓவர்கள் முடிவில் 102/4 என்று தடுமாறிய போது கே.எல்.ராகுலுடன் இணைந்தார் தோனி. இறங்கியவுடனேயே கொஞ்சம் கடினமான பந்தை சரியான் டைமிங்கில் கவர் பவுண்டரிக்கு அனுப்பி எண்ணிக்கையைத் தொடங்கினார்.
இவரும் ராகுலும் ரன் விகிதத்தை உயர்த்தத் தொடங்கினர். கே.எல்ராகுல் 45 பந்துகளில் அரைசதம் கடந்தார். தோனி முதல் 15 பந்துகளில் 8 ரன்கள். 30 ஓவர்கள் முடிவில் 150/4 என்று கொஞ்சம் ரன் விகிதம் முன்னேற்றம் கண்ட நிலையில் ராகுல் 31வது ஓவரை விச வந்த ஷாகிப் அல் ஹசனை நன்றாகக் கவனித்தார். ஒரு சிக்ஸ் 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் அந்த ஓவரில் விளாசப்பட்டது. இந்த ஓவருக்குப் பிறகு வங்கதேச ஆஃப் ஸ்பின்னர் மெஹதி ஹசன் மிராஸ் வர தோனி மேலேறி வந்து லாங் ஆன் மேல் ஒரு சிக்சரை அடித்து சிக்சர் கணக்கைத் தொடங்கினார்.
இருப்பினும், கேப்டன் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய கோலி 47(46) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய விஜய் சங்கர் 2 ரன்னில் வெளியேறினார்.
பின்னர், கே.எல்.ராகுலுடன், தோனி ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி சீரான வேகத்தில் ரன்களை சேர்த்தனர். அதனால், அணியின் ரன் கிடுகிடுவென உயர்ந்தது. அசத்தலாக விளையாடி சதம் அடித்தார் கே.எல்.ராகுல். அவர் 108 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் 4 சிக்ஸர், 12 பவுண்டரிகள் விளாசினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய தோனி, 99 ரன்னில் இருந்த போது சிக்ஸர் விளாசி சதம் அடித்தார். அவர் 73 பந்துகளில் சதம் விளாசினார். 78 பந்துகளில் 7 சிக்ஸர் 8 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார்.
இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரில் களமிறங்கிய ஜடேஜா ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்தார். பங்களாதேஷ் அணியில் ருபல் ஹுசைன், ஷகிப் அல் ஹாசன் தலா இரண்டு விக்கெட் சாய்த்தனர்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பி இருந்தனர். அதனால், சற்றே இந்திய அணியின் மீது விமர்சனம் எழுந்தது. அதனையடுத்து, இன்றைய போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி அசத்தியுள்ளனர்.
Classic Dhoni and classic Virat ??? pic.twitter.com/jplLRvAVPy
— Papa CJ (@PapaCJ) May 28, 2019