வீடியோ : அண்டர்-19 உலகக்கோப்பையில் 8 விக்கெட் எடுத்து சாதனை படைத்த ஆஸி வீரர்!! 1

ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டியில் எட்டு விக்கெட் வீழ்த்தி ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் லாயிட் போப் சாதனை படைத்தார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான, ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த காலிறுதி போட்டியில் இங்கிலாந்து – ஆஸ்திரேலிய அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன் படி களமிறங்கிய அந்த அணி,33.3 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

அந்த அணியின் கேப்டன் சங்கா மட்டும் அதிகப்பட்சமாக 58 ரன்கள் எடுத்தார்.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியை, இளம் சுழற்பந்துவீச்சாளர் லாயிட் போப் கிறங்கடித்தார். அந்த அணி, 23.4 ஓவர்களில் 96 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. போப் அபாரமாக பந்து வீசி 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் இது சிறப்பான பந்துவீச்சு ஆகும்.

வீடியோ : அண்டர்-19 உலகக்கோப்பையில் 8 விக்கெட் எடுத்து சாதனை படைத்த ஆஸி வீரர்!! 2

இதையடுத்து ஆஸ்திரேலிய அணி, அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆட்ட நாயகன் விருது லாயிட் போப்புக்கு வழங்கப்பட்டது.

போட்டிக்குப் பின் பேசிய போப், ’கேப்டன் சங்கா நம்பிக்கை அளித்தார். ஒரு கட்டத்தில் பந்து நன்றாக சுழல ஆரம்பித்தது. அதனால் விக்கெட் எடுக்க முடிந்தது. சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்ன்தான் என் ஹீரோ. அவர் சில நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதன்படி பந்துவீசி, விக்கெட்டுகளை வீழ்த்தினேன்’ என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *