விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதனைத்தொடர்ந்து தற்போது 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் நடைப்பெற்று வருகிறது. முன்னதாக முதல் ஒருநாள் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடினார். இதன்படி இந்திய அணியின் சார்பில் ஷிகார் தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இதில் ஷிகார் தவான் 2(3) ரன்னில் வெளியேற, அவரைத்தொடர்ந்து ரோகித் சர்மா 18(34) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய ரிஷாப் பாண்ட் 20(35) ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்ததாக கேப்டன் விராட் கோலியுடன், ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கோலி 112 பந்துகளில் தனது 42-வது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.
மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 71(68) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து கேதர் ஜாதவ் 16(14) ரன்களும், அடுத்து களமிறங்கிய புவனேஷ்வர் குமார் 1(2) ரன்னும் எடுத்து வெளியேறினர்.
இறுதியில் ரவீந்திர ஜடேஜா 16(16) ரன்களும், முகமது ஷமி 3(5) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 279 ரன்கள் சேர்த்தது. மேற்கிந்திய அணி சார்பில் பிராத்வெய்ட் 3 விக்கெட்டுகளும், ஜாசன் ஹோல்டர், ரோஸ்டன் சேஸ் மற்றும் ஷெல்டன் காட்ரெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். மேற்கிந்திய அணி இண்டிஸ் அணிக்கு 280 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டிஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெய்ல் மற்றும் இவின் லீவிஸ் களம் இறங்கினர். இருவரும் இணைந்து நிதானமான ஆட்டத்தை தொடர்ந்த நிலையில் ஆட்டத்தின் 9.3வது ஓவரில் புவனேஷ்குமார் வீசிய பந்தில் அதிரடி ஆட்ட நாயகன் கிறிஸ் கெய்ல் 11 (24) தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்ததாக களம் இறங்கிய ஷாய் ஹோப் 5 (10) வந்த வேகத்தில் வெளியேறினார். அவரை தொடர்ந்து ஹெட்மயர் களம் இறங்க ஆட்டத்தின் 12 வது ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் கழித்து தாமதாக தொடங்கியது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் மழை காரணமாக ஆட்டம் 46 ஓவர்களாக (DLS முறைப்படி) குறைக்கப்பட்டு, வெற்றி இலக்கு 270-ஆக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து நிலைத்து நின்று ஆட நினைத்த மேற்க்கிந்திய அணி வீரர் ஹெட்மயர் 18 (20) ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி வீரர் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அவரை தொடர்ந்து களம் இறங்கிய நிகோலஸ் பூரன், இவின் லீவிஸ்வுடன் ஜோடி சேர்ந்து ரன்களை வெகுவாக குவிக்க துவங்கினர். இதில் இவின் லீவிஸ் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.
இவரை தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய அணி வீரர்கள் இந்திய பந்து வீச்சை தாக்குப்பிடிக்காமல் பெவிலியன் திரும்பினர். அதனை தொடர்ந்து காட்ரெல் 17 (18), தாமஸ் 0 (1) என்ற முறையில் விக்கெட்களை இழந்தனர்,
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களை இழந்து மேற்கிந்திய அணி 210 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர்குமார் 4 விக்கெட்களும், முகமது ஷமி மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்களும், அஹமது, ரவீந்திர ஜடேஜா தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினர். இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்தியா 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
Woaaaaah! What a catch @BhuviOfficial ??? #WIvIND pic.twitter.com/lWTie1RpE4
— Gaurav Kapur (@gauravkapur) August 11, 2019
What a catch by #bhuvi @BhuviOfficial @BCCI pic.twitter.com/t9aHZBqMx3
— Prasad prabhudesai (@Prasadprabhude2) August 11, 2019