இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் இந்திய கேப்டன் விராட் கோலியின் விஸ்வரூபத்தால் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியுற்றது. முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா 149/5 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை குவித்து வென்றது.
3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் ஆடி வருகின்றன. தர்மசாலாவில் நடைபெறவிருந்த முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இரண்டாவது ஆட்டம் மொஹாலியில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்தது.
தென்னாப்பிரிக்க தரப்பில் கேப்டன் குயிண்டன் டி காக்-ரீஸா ஹென்ட்ரிக்ஸ் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஹென்ட்ரிக்ஸ் 6 ரன்களுடன் தீபக் சாஹர் பந்தில் சுந்தரிடம் கேட்ச் தந்து வெளியேறினார். பின்னர் கேப்டன் டி காக்-டெம்பா பவுமா இணைந்து அதிரடியாக ஸ்கோரை உயர்த்தினர். 10-ஆவது ஓவர் முடிவில் 78/1 ரன்களை எடுத்திருந்தது தென்னாப்பிரிக்கா.
8 பவுண்டரியுடன் 37 பந்துகளில் 52 ரன்களை விளாசிய கேப்டன் டிகாக், நவ்தீப் சைனி பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் தந்து அவுட்டானார். இது அவரது 3-ஆவது டி20 அரைசதமாகும். அவரைத் தொடர்ந்து வந்த ரேசி வேன்டரை 1 ரன்னுடன் வெளியேற்றினார் ரவீந்திர ஜடேஜா.
அதிரடியாக ஆடி வந்த டெம்பா பவுமா 1 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 49 ரன்களை எடுத்து, தீபக் சாஹர் பந்தில் அவுட்டானார். அப்போது 4 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களை எடுத்திருந்தது தென்னாப்பிரிக்கா. அவருக்கு பின் டேவிட் மில்லரை 18 ரன்களுடன் போல்டாக்கினார் ஹார்திக் பாண்டியா.
டுவைன் பிரிட்டோரியஸ் 10, அன்டில் பெலுக்வயோ 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை மட்டுமே எடுத்தது தென்னாப்பிரிக்கா.
இந்திய தரப்பில் தீபக் சாஹர் 2-22 விக்கெட்டுகளையும், சைனி, ஜடேஜா, பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
150 ரன்கள் வெற்றி இலக்குடன் இந்திய தரப்பில் ரோஹித் சர்மா-ஷிகர் தவன் களமிறங்கினர். 12 ரன்களுடன் ரோஹித் வெளியேறிய நிலையில், தவன்-கேப்டன் கோலி இணைந்து அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். 1 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 40 ரன்களை எடுத்த தவன், ஷம்ஸி பந்தில் வெளியேறினார். அவருக்கு பின் வந்த இளம் வீரர் ரிஷப் பந்த் வழக்கம் போல் ஜான் பார்ட்டின் வீசிய பந்தை தவறாக கணித்து ஆடி 4 ரன்களுக்கு அவுட்டானார்.
3 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 52 பந்துகளில் 72 ரன்களுடன் விராட் கோலியும், 16 ரன்களுடன் ஷிரேயஸ் ஐயரும் களத்தில் இருந்தனர்.
அபாரமாக ஆடிய விராட் தனது 22-ஆவது டி20 அரைசதத்தை பதிவு செய்தார். 19 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து 151 ரன்களுடன் வெற்றி பெற்றது இந்தியா. இதன் மூலம் 3 ஆட்டங்கள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
That reaction from Kohli says it all! #INDvSA pic.twitter.com/ECuU9i15fY
— Karan P. Saxena (@karanpsaxena92) September 18, 2019
#KingKohli stunned ?? by #DavidMiller catch. .
Killer catch from #DavidMiller ???#IndvsSA #INDvSA # pic.twitter.com/Nhds9FVqkw
— Pavan (@Realistic__Life) September 19, 2019