வீடியோ: திடீரென ஓய்வு நாளை பற்றி பேசிய ஹர்திக் பாண்டியா! என்ன ஆச்சு? 1

ஊரடங்கு உத்தரவு காரணமாக கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வரும் நிலையில் ஹர்திக் பாண்டியா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள பிரபலங்கள் பலர் தங்களது அனுபவங்களை வீடியோ மற்றும் புகைப்படங்களாக பகிர்ந்து வருகின்றனர்.

இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கடுமையாக உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை பதிவிட்டுள்ளார். வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டாலும் உடல் ஆரோக்கியம் முக்கியமானது. உறுதி மற்றும் ஆரோக்கியமாக இருங்கள் என்றுள்ளார். இந்த வீடியோவை ஓய்வு என்ற நாளே கிடையாது என்று தலைப்பிட்டு மும்பை இந்தியன்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.வீடியோ: திடீரென ஓய்வு நாளை பற்றி பேசிய ஹர்திக் பாண்டியா! என்ன ஆச்சு? 2

ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்தார். காயம் குணமடைந்து தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றார். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக தென்னாப்பிரிக்கா தொடர் ரத்து செய்யப்பட்டது.

 

 

 

ஐபிஎல் போட்டி மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தவர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருணால் பாண்டியா. ஹர்திக் பாண்டியா பந்துவீச்சாளர், அதிரடி அட்டக்காளர் மற்றும் சிறந்த கலபனியாளர் ஆகிய சகல துறையிலும் திறன் பெற்றவர்.அவரை போலவே அவரது அண்ணனும் மூன்று துறைகளிலும் சிறப்பாக விளங்க கூடியவர்.இவர்கள் இருவரும் ஐபிஎல் லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தற்பொழுது விளையாடி வருகின்றனர்.

கோலிவுட்டில் பல வருடங்களாக இருக்கும் ஒரே போட்டி தலயா தளபதியா. இவர்களின் ரசிகர்கள் எப்போதும் சமூக வலைத்தளத்தில் போட்டி போட்டுக் கொள்வார்கள். இதற்கு முன் இவர்களைப் போல சிவாஜி எம்ஜிஆர் மற்றும்  கமல்ஹாசன் ரஜினி என்று தமிழ் சினிமாவில் போட்டி இருந்து கொண்டே இருக்கும்.

rajini

இந்நிலையில் க்ருணால் பாண்டியா சமிபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் தனக்கு தென்னிந்திய நடிகர்களில் இவரை தான் பிடிக்கும் என்று கூறியுள்ளார். அது வேறு யாரும் இல்லை நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். மேலும் பிரபல டிஸ்கவரி சேனல் ஒன்றில் சூப்பர் ஸ்டாரை வைத்து இன் டு தி வைலெட் என்ற நிகழ்ச்சி நடத்தியதால் உலக அளவில் பிரபலமானது.

rajini

இதன் மூலம் 1.2 கோடி வருமானம் வந்ததாகவும் மற்றும் 10 மடங்கு பார்வையாளர்கள் அதிகரித்ததாகவும் சேனல் தெரிவித்துள்ளது.இதனால் தான் அவர் இன்றளவும் no.1 இடத்தில் இருக்கிறார் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *