வீடியோ – சதம் அடித்ததும் உணர்ச்சி பெற்ற ஹர்மன்ப்ரீட் கவுர்

பெண்கள் உலகக்கோப்பை தொடரில் இன்று 2-வது அரையிறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

மழைக்காரணமாக ஆட்டம் 42 ஓவராக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி மந்தனா, பூனம் ரவுத் ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினார்கள்.

மந்தனா 6 ரன்னிலும், ரவுத் 14 ரன்னிலும் வெளியேறினார்கள். அடுத்து கேப்டன் மிதாலி ராஜ் உடன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. அணியின் ஸ்கோர் 101 ரன்னாக இருக்கும்போது மிதாலி ராஜ் 36 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

மறுமுனையில் விளையாடிய கவுர் 64 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 90 பந்தில் சதம் அடித்தார்.

அதன்பின் கவுர் ஆட்டத்தில் அதிரடி காட்டினார். பந்தை சிக்சருக்கும் பவுண்டரிக்கும் என விரட்டினார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 37-வது ஓவரை கார்ட்னெர் வீசினார். இந்த ஓவரில் தலா இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரிகள் விளாசினார். 38-வது ஓவரில் இரண்டு பவுண்டரிகளும், 39-வது ஓவரில் ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரி, 41-வது ஓவரில் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார்.

இவரது ஆட்டத்தால் இந்தியா 42 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் குவித்தது. ஹர்மன்ப்ரீத் 115 பந்தில் 20 பவுண்டரி, 7 சிக்சருடன் 171 ரன்கள் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

தன் சத்தை அடித்தது உணர்ச்சி பெற்றார் ஹர்மன்ப்ரீட் கவுர். அந்த வீடியோவை பாருங்கள்:

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.