இந்திய அணி கிரிக்கெட் வரலாற்றிலேயே முதன்முறையாக பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் பங்கேற்கிறது. பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலியின் தீவிர முயற்சியால் கொல்கத்தாவில் நடத்தப்படும் இந்த ஆட்டத்தில் வங்கதேச அணியுடன் மோதுகிறது இந்தியா. இந்த ஆட்டத்தில் இளஞ்சிவப்பு (பிங்க்) நிற பந்துகள் பயன்படுத்தப்பட உள்ளன.
இந்தியா-வங்கதேசம் இடையே நடைபெறவுள்ள முதல் பகலிரவு டெஸ்ட்டுக்காக முதல் 3 நாள்கள் டிக்கெட்டுகள் முழுமையாக விற்று விட்டன என கங்குலி கூறியுள்ளாா். பகலிரவு டெஸ்ட் ஆட்டத்துக்காக கொல்கத்தா நகரமே பிங்க் நிறமாக மாறியுள்ளது. மைதானம் அருகே பெரிய ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டுள்ளது.
டாஸ் வென்ற வங்கதேச கேப்டன், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றங்கள் எதுவும் இல்லை. வங்கதேச அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, கங்குலி, டெண்டுல்கர், டிராவிட், லக்ஷ்மண், ஹர்பஜன் சிங், அகர்கர் என பிரபலங்கள் பலர் இந்த வரலாற்றுத் தருணத்தில் பங்கேற்றுள்ளார்கள். வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி ஆகியோரிடம் இரு அணி வீரர்களும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். இந்த நிகழ்வில் பங்கேற்ற சச்சின் டெண்டுல்கருக்கு ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தார்கள். ராணுவ பேண்ட் வீரா்களால் இரு அணிகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன.

மதிய உணவு இடைவேளையின்போது, சச்சின், கங்குலி, லக்ஷ்மண், டிராவிட், கும்ப்ளே ஆகியோர் 2001 கொல்கத்தா டெஸ்ட் குறித்து தங்களுடைய நினைவுகளைக் கூறுவார்கள்.
தொடக்க நிகழ்வின் விடியோக்கள் பிசிசிஐ-யால் வெளியிடப்பட்டுள்ளன.
Her Excellency Sheikh Hasina, Prime Minister of Bangladesh, @MamataOfficial, Honourable Chief Minister, West Bengal ring the bell at the iconic Eden Gardens.#PinkBallTest @Paytm #INDvBAN pic.twitter.com/a0e3Oh8Ygd
— BCCI (@BCCI) November 22, 2019
Her Excellency Sheikh Hasina, Prime Minister of Bangladesh, @MamataOfficial, Honourable Chief Minister, West Bengal and #TeamIndia great @sachin_rt greet #TeamIndia ahead of the #PinkballTest pic.twitter.com/ldyrKjbxrE
— BCCI (@BCCI) November 22, 2019
Bangladesh have won the toss and will bat first in the #PinkBallTest @Paytm #INDvBAN pic.twitter.com/LCTkWZ6bKM
— BCCI (@BCCI) November 22, 2019