தற்போது இந்திய அணி இலங்கைக்கு சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளைய்டி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, மூன்றாவது டெஸ்ட் போட்டியையும் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது.
மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 487 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனை தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி, இரண்டாவது நாளில் தேனீர் இடைவேளையின் போது 61 க்கு நான்கு விக்கெட் இழந்து தடுமாறியது.
நிரோஷன் டிக்கவெல்லா 14 ரன்களுடனும் தினேஷ் சந்திமால் 13 ரன்களுடனும் இருந்தபோது தேனீர் இடைவெளி என நடுவர்கள் அறிவித்தார்கள்.
அப்போது, இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 2 விக்கெட்டும் ஹர்டிக் பாண்டியா 1 விக்கெட்டும் எடுத்திருந்தார்கள்.
முன்னதாக, ஷிகர் தவான் 119 மற்றும் ஹர்டிக் பாண்டியா 108 ரன் அடிக்க, முதல் இன்னிங்சில் இந்திய அணி 487 ரன் அடித்தது.
அப்போது சின்ன பையனிடம் ஜுஸ் கொடுத்தனுப்பினார் இஷாந்த் ஷர்மா: