போட்டி முடிந்த உடன் மைதான பாதுகாவலருடன் டான்ஸ் ஆடிய இந்திய வீராங்கனை! 1

மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. நியூஸிலாந்துக்கு எதிராக இந்திய மகளிர் அணி இன்று விளையாடுகிறது.

இந்நிலையில் (பணி முடித்த) பெண் பாதுகாவலருடன் இணைந்து இந்திய இளம் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ் (19) நடனம் ஆடியதன் விடியோவை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த விடியோவுக்கு அஸ்வின், ஜேசன் கில்லஸ்பி உள்ளிட்ட பிரபல வீரர்களும் ரசிகர்களும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

மகளிர் இருபது ஓவர் உலகக் கோப்பை‌யில், இந்தியா முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில்‌ நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின்
தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 34 பந்துகளில் 46 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.‌‌ பின்னர் இந்திய அணிக்கு சீரான வேகத்தில் விக்கெட்டுகள் வீழ்த்த வண்ணம்
இருந்தன.

image

20‌ ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் சேர்த்தது. பின்னர் களம் கண்ட நியூசிலாந்து அணி இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள
முடியாமல் திணறியது. நட்சத்திர வீராங்கனைகள் ரேசல் பிரிஸ்ட், சுஸி பேட்ஸ், சோஃபி டிவைன் ஆகியோரை சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க செய்து இந்தியா அசத்தியது.
இருப்பினும் ஆல்ரவுண்டர் அமிலியா கேர்ரின் கடைசி கட்ட அதிரடியால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

image

கடைசி பந்தில் நியூசிலாந்து அணி வெற்றிப் பெற 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், வேகப்பந்து வீச்சாளர் ஷிகா பாண்டே நேர்த்தியாக பந்துவீச, இந்திய அணி 4 ரன்கள்
வித்தியாசத்தில் த்ரில் வெற்றிப் பெற்றது. இந்தியா மூன்று லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றதால் அரையிறுதிக்கு முதல் அணியாக முன்னேறி அசத்தியுள்ளது.‌
அதிரடியாக விளையாடி 46 ரன்கள் சேர்த்த ஷபாலி வர்மா ஆட்ட நாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *