ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 5-ஆவது டெஸ்டில் 135 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2-2 என தொடரையும் சமன் செய்தது இங்கிலாந்து.
இரு அணிகளுக்கு இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. ஆஸி. 2-இலும், இங்கிலாந்து 1 ஆட்டத்திலும் வென்றன. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றிய நிலையில், இறுதி டெஸ்ட் ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 294, ஆஸ்திரேலியா 225 ரன்களுக்கு ஆல் அவுட்டாகின. இதன் தொடர்ச்சியாக இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஜோன் டென்லி 94, பென் ஸ்டோக்ஸ் 67, ஜோஸ் பட்லர் 47 ஆகியோர் சிறப்பானஆட்டத்தால் 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸி. தரப்பில் நாதன் லயன் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
399 ரன்கள் வெற்றி இலக்கு: ஆட்டத்தின் நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்ûஸ தொடர்ந்தது.
இங்கிலாந்தின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆஸி. தொடக்க வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். மார்கஸ் ஹாரிஸ் 9, டேவிட் வார்னர் 11, ஸ்டீவ் ஸ்மித் 23 ஆகியோரை ஸ்டுவர்ட் பிராட் அவுட்டாக்கினார். நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்மித் அவுட்டாகி சென்றது, ஆஸி. அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
மார்னஸ் லேபுச்சேனை 14 ரன்களுக்கு வெளியேற்றினார் ஜேக் லீச்.
மேத்யூ வேட் அபார சதம்: மிச்செல் மார்ஷ்-மேத்யூ வேட் இணை சேர்ந்து நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். பொறுமையாக ஆடிய வேட் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். எனினும் மிச்செல் மார்ஷை 24 ரன்களுடன் பெவிலியனுக்கு அனுப்பினார் ஜோ ரூட்.
கேப்டன் டிம் பெயின் 21, பேட் கம்மின்ஸ் 9, நாதன் லயன் 1, ஹேஸல்வுட் 0 என சொற்ப ரன்களுடன் வெளியேறினர்.
1 சிக்ஸர், 17 பவுண்டரியுடன் 117 ரன்களை விளாசி வெளியேறினார் மேத்யூ. இறுதியில் 77 ஓவர்களில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆஸி.
பிராட்-லீச் 4 விக்கெட்: இங்கிலாந்து தரப்பில் பிராட் 4-62, ஜேக் லீச் 4-49, ரூட் 2-26 விக்கெட்டுகளை சாய்த்தனர். இந்த வெற்றி மூலம் தொடரையும் 2-2 என சமன் செய்தது இங்கிலாந்து. தொடர் நாயகனாக ஸ்மித்தும், ஆட்ட நாயகனாக ஆர்ச்சரும் தேர்வு பெற்றனர்.
That is seriously sharp @jbairstow21!! ?
Scorecard & Live Clips: https://t.co/L5LXhA6aUm#Ashes pic.twitter.com/tLkA9drNvt
— England Cricket (@englandcricket) September 15, 2019