வீடியோ: வம்பிழுக்க நினைத்த அப்ரிடியை துவம்சம் செய்த தோனி

மகேந்திர சிங் தோனியிடம் இருந்து அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த போது தனது பொறுமையை இழந்து பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி வெறும் 123 பந்துகளில் 148 ரன் அடித்து அசத்தினார். அந்த நேரத்தில் இந்திய அணிக்கு மகேந்திர சிங் தோனி புதிய வீரர், இவரை முதல் விக்கெட் விழுந்ததும் பேட்டிங் விளையாட அனுப்பினார்கள். இதனால், அவருக்கு ஒரு பதற்றம் இருந்தது. அந்நேரத்தில் அவரை வம்பிழுக்க நினைத்தார் பாகிஸ்தானி அணியின் ஷாஹித் அப்ரிடி.

பதற்றமாக இருந்த மகேந்திர சிங் தோனி, பாகிஸ்தான் அணியின் ஆல்-ரவுண்டர் ஷாஹித் அப்ரிடியின் ஓவரில் பவுண்டரி அடித்து தனது இன்னிங்க்ஸை தொடங்கி அசத்தினார். அதன் பிறகு, தோனியிடம் வம்பிழுக்க நினைத்தார் அப்ரிடி, ஆனால் அதை தோனி கண்டுகொள்ளாமல் சிரித்து கொண்டே சென்றார். அதன் பிறகு அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு முக்கிய இன்னிங்க்ஸை விளையாடினார் தோனி.

இந்திய அணியின் அதிரடி தொடக்கவீரர் விரேந்தர் சேவாக் விளையாடி கொண்டிருந்ததால், அந்நேரத்தில் தோனியை பற்றி 40 பந்துகளில் 74 ரன் அடித்த சேவாக் அவுட் ஆன பிறகு, தனது அதிரடி விளையாட்டை தொடங்கினார் தோனி. 15 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் என விளாசிய மகேந்திர சிங் தோனி 123 பந்துகள் எதிர்கொண்டு 148 ரன்கள் எடுத்து அசத்தினார். அவர் இறங்கிய உடன் அவரை வம்பிழுக்க நினைத்த அப்ரிடி அவரது 9 ஓவரில் 82 ரன் வாரி கொடுத்தார்.

அந்த வீடியோவை இங்கு பாருங்கள்:

முதலில் விளையாடிய இந்திய அணி தனது 50 ஓவரில் 356 ரன் அடித்தது. அதன் பிறகு விளையாடிய பாகிஸ்தான் அணி 45 ஓவரில் 298 ரன் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இதனால், இந்திய அணி 58 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அசத்தலாக விளையாடிய தோனி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.