”என் முதல் காதலியின் பெயர் இது தான்.. ப்ளீஸ் சாக்‌ஷி கிட்ட சொல்லிடாதீங்க”..க்யூட் தோனி!!! 1

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, நிகழ்ச்சி ஒன்றில் தனது முதல் காதலி குறித்து பேசிய வீடியோ ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்க வைத்துள்ளது.

இரண்டு ஆண்டு தடைகளுக்கு பின்பு, ஐபிஎல் போட்டியில் களம் இறங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, இம்முறை கண்டிப்பாக வெற்றியை வசப்படுத்திட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்.

அதற்கேற்ப அணி வீரர்களும் கடுமையாக உழைத்து ஒவ்வொரு போட்டியிலும் அவர்களின் பெஸ்ட்டை காட்டி வருகிறார்கள். அதன் பயனாக சென்னை அணி, பிளே-ஆஃப் சுற்றுக்கள் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இந்நிலையில், தான் தோனி விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் சென்னை அணி வீரர்களுடன் கலந்துக் கொண்டார்.

https://www.youtube.com/watch?v=wXaBPTIRRL0

அப்போது அவர்களிடம் பொழுதுபோக்கிற்காக வார்த்தை போட்டி நடத்தப்பட்டது. அதில் தோனியிடம் தனது முதல் காதலியின் பெயர் என்னவென்று கேட்டனர். முதலில் பெயரை சொல்ல தங்கிய தோனி பின்பு, கூலாக ’ஸ்வாதி’ என்றார். அடுத்தகணமே, என் மனைவியிடம் சொல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

”என் முதல் காதலியின் பெயர் இது தான்.. ப்ளீஸ் சாக்‌ஷி கிட்ட சொல்லிடாதீங்க”..க்யூட் தோனி!!! 2

தோனியின் பதிலைக் கேட்டு அரங்கத்தில் இருந்த அனைவரும் சிரித்தனர். அதன் பின்பு, மெல்ல தனது பழைய நினைவுகளுக்கு சென்ற தோனி அவரை கடைசியாக 1999 ஆம் ஆண்டு 12 படிக்கும் போது பார்த்ததாகவும் தெரிவித்தார். வழக்கம் போல் இந்த வீடியோவும் அவரின் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *