வீடியோ.. இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதை வென்ற சாஹித் அப்ரிடி !!

வீடியோ.. இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதை வென்ற சாஹித் அப்ரிடி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சாஹித் அப்ரிடியின் வீடியோ ஒன்றை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைகளின் பின்னணியில் உள்ள செயிண்ட் மோர்டிசின் உறைந்த ஏரியில் ஐஸ் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில், பல முன்னாள் கிரிக்கெட் பிரபலங்கள் பங்கேற்றனர்.

இங்கு நடந்த இரண்டு போட்டியிலும் இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக் தலைமையிலான  டைமண்ட்ஸ் அணி தோல்வியை சந்தித்தது.

இந்த போட்டியின் முடிவில் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் பலர் கிரிக்கெட் வீரர்களுடன்ச் செல்ஃபி எடுத்து கொண்டு, அவர்களிடம் கையொப்பமும் பெற்றுக்கொண்டனர்.

இதில் போட்டியை பார்க்க வந்திருந்த இந்திய ரசிகர்கள் சிலர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி ஆட்டக்காரருமான சாஹித் அப்ரிடியுடன் செல்ஃபி எடுக்க முயன்றனர்.

அப்பொழுது அவர்கள் கைகளில் வைத்திருந்த இந்திய தேசிய கொடி மடங்கி இருப்பதை கவனித்த சாஹித் அப்ரிடி, அதனை சரி செய்து கொள்ளும் படி இந்திய ரசிகர்களை அறிவுறுத்தினர், ரசிகர்களும் தேசிய கொடியை சரி செய்த பின்னர், இந்திய தேசிய கொடியுடன் சேர்த்து அப்ரிடி செல்ஃபி எடுத்து கொண்டார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், எலியும் பூனையும் போல் பாவிக்கப்பட்டு வரும் இந்திய, பாகிஸ்தான் நாடுகளின் பகையை கண்டுகொள்ளாமல் இந்திய தேசிய கொடிக்கு அப்ரிடி மரியாதை செலுத்தியதை இந்திய ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

 

 

Mohamed:

This website uses cookies.