வீடியோ: இரண்டு கையால் பந்து வீசி, விக்கெட்டும் எடுத்து அசத்திய இளம் வீரர்! 1

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மான்சி சூப்பர் லீக் டி20 கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளர் இரண்டு கைகளாலும் பந்து வீசி விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

தென்ஆப்பிரிக்காவில் மான்சி சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் கேப் டவுன் பிளிட்ஸ் – டர்பன் ஹீட் அணிகள் மோதின.

வீடியோ: இரண்டு கையால் பந்து வீசி, விக்கெட்டும் எடுத்து அசத்திய இளம் வீரர்! 2
During a T20 match between Cape Town and Durban Heat in the ongoing Mzansi Super League, Gregory Mahlokwana surprised everyone by picking up wickets with each hand.

முதலில் பேட்டிங் செய்த கேப் டவுன் பிளிட்ஸ் 174 ரன்கள் குவித்தது. பின்னர் 75 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டர்பன் ஹீட் அணி களம் இறங்கியது. 8-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் மலோக்வானா வீசினார். இந்த ஓவரின் 7.2-வது பந்தை அவர் வலது கையால் வீசினார். பந்தை எதிர்கொண்ட இடது கை பேட்ஸ்மேன் எர்வீ மிட் ஆஃப் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

வீடியோ: இரண்டு கையால் பந்து வீசி, விக்கெட்டும் எடுத்து அசத்திய இளம் வீரர்! 3
The all-rounder first dismissed opener Sarel Erwee on 16 in the eighth over while bowling with the right-hand. He then dismantled the stumps of Durban skipper Dane Vilas in the tenth over, while bowling with left.

10-வது ஓவரை மலோக்வானா வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தை இடது கையால் வீசினார். பந்தை எதிர்கொண்ட வலது கை பேட்ஸ்மேன் விலாஸ் 8 ரன்கள் எடுத்த நிலையில் க்ளீன் போல்டானார்.

இந்த போட்டியில் கேப் டவுன் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுழற்பந்து வீச்சாளரான மலோக்வானா இரண்டு கைகளாலும் பந்து வீசியதோடு, விக்கெட்டுக்களையும் வீழ்த்தி அனைவரது பார்வையையும் ஈர்த்துள்ளார்.

வீடியோ: இரண்டு கையால் பந்து வீசி, விக்கெட்டும் எடுத்து அசத்திய இளம் வீரர்! 4
In response, Durban lost opener Alex Hales for a duck in the first over. Wihan Lubbe kept Durban in the contest, but his 42 balls 83 went in vain as his side could only manage 164/7 in the 20 overs.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *