இங்கிலாந்து-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் 2-ஆவது டெஸ்ட் மூன்றாவது நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.
5 ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் 251 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. வென்றது.
இரண்டாவது டெஸ்ட் லார்ட்ஸில் நடக்கிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 258 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரோரி பர்ன்ஸ் 53, ஜானி பேர்ஸ்டோ 52, கிறிஸ் வோக்ஸ் 32, ரன்களை எடுத்தனர்.
ஆஸி. தரப்பில் ஹேஸல்வுட் 3-58, பேட் கம்மின்ஸ் 3-61, நாதன் லயன் 3-68 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸி. அணியால் இங்கிலாந்தின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியவில்லை.
பேன்கிராப்ட் 13, டேவிட் வார்னர் 3, உஸ்மான் காஜா 36, டிராவிஸ் ஹெட் 7 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினர். 37.1 ஓவரின் போது 4 விக்கெட் இழப்புக்கு 80 ரன்களை ஆஸி. எடுத்திருந்தபோது, பலத்த மழை பெய்தது. இதனால் உணவு இடைவேளையின் போது ஆட்டம் நிறுத்தப்பட்டது.
ஸ்டீவ் ஸ்மித் 13, மேத்யூ வேட் ரன் ஏதுமின்றி களத்தில் இருந்தனர்.
இங்கிலாந்தைக் காட்டிலும் 178 ரன்கள் பின்தங்கி உள்ளது ஆஸ்திரேலியா.
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தை முதல் இன்னிங்சில் 258 ரன்களுக்கு சுருட்டியதில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நேதன் லயன் டெனிஸ் லில்லியின் 355 விக்கெட்டுகள் டெஸ்ட் கிரிக்கெட் சாதனையைச் சமன் செய்தார்.
ஆனாலும் அவர் 2ம் நாள் ஆடட்த்தில் ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் தரம் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். ஜோஷ் ஹேசில்வுட்டின் லைன் மற்றும் லெந்த் பற்ரி கடுமையாகப் பாராட்டிய நேதன் லயன், கமின்ஸின் பிற்பகுதி பவுன்சர் வீச்சையும் பாராட்டினார், ஆனால் மற்றபடி 138/6 என்ற நிலையிலிருந்து 258 ரன்கள் வரை அடிக்க அனுமதித்திருக்கக் கூடாது என்கிறார் நேதன் லயன்.
மேலும் 3 கேட்ச்களும் விடப்பட்டது, இதுவும் நேதன் லயன் அதிருப்திக்குக் காரணம் என்று கருதப்படுகிறது.
“2ம் நாள் ஆட்டத்தைப் பார்க்கும் போது நான் வெளிப்படையாக நேர்மையாகக் கூற வேண்டுமெனில் நாங்கள் சிறப்பாக ஆடியதாகக் கூற முடியாது. ஜோஷ் ஹேசில்வுட் எப்போதுமே உலகத்தரம் வாய்ந்த பவுலர் அதுவும் 2ம் நாள் அவர் தனித்திறமையுடன் ஆக்ரோஷமாக வீசினார், பாட் கமின்ஸ் தேநீர் இடைவேளைக்குப் பிறகு வீசிய பவுன்சர்கள் நீங்கலாக நாங்கள் அவ்வளவு சிறப்பாக ஆடவில்லை.
நாம் டெஸ்ட் கிரிக்கெட் ஆடுகிறோம், உலகத்தரம் வாய்ந்த வீரர்களுக்கு எதிராக ஆடுகிறோம் எப்படியும் அங்கும் இங்கும் பேட்டிங் கூட்டணிகள் அமையவே செய்யும். பவுலர்கள் தங்கள் அடிப்படைகளை நீண்டநேரங்களுக்கு அங்கு செய்து வருகின்றனர், ஆனால் ஆஸ்திரேலிய தரநிலைகளுக்கு நாங்கள் நேற்று ஆடவில்லை. அதாவது ஓய்வறையிலும் எங்கள் பவுலிங் கூட்டணியிலும் உள்ள தரநிலை இல்லை. இன்னும் முன்னேற்றம் தேவை” என்று ஆதங்கப்பட்டுள்ளார் நேதன் லயன்.
Steve Smith leaving the ball is the most entertaining thing I’ve seen in a long time ???? #Ashes pic.twitter.com/nuuyRrDpaJ
— Alexandra Hartley (@AlexHartley93) August 16, 2019
The curious case of Steve Smith's "technique" ??
WATCH: @Channel9 and @9Gem
STREAM: https://t.co/yF5zZnMEpX#9WWOS #Ashes pic.twitter.com/OKIZo7PoVA— Wide World of Sports (@wwos) August 17, 2019