ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி-10 லீக் போட்டியில் ‘தல’ தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை கச்சிதமாக அடித்த ரஷித் கான், அந்த வீடியோவை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான ’தல’ தோனி, ‘ஹெலிகாப்டர் ஷாட்’ என்ற சிக்சர் அடிக்கும் முறையை சர்வதேச கிரிக்கெட் அரங்கிற்கு அறிமுகம் செய்து வைத்தார். ஆஃப்கானிஸ்தான் அணியின் 20 வயதேயான நட்சத்திர வீரர் ரஷித் கான், கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறார்.
சுழற்பந்து மட்டுமல்லாமல், பேட்டிங்கிலும் சாதித்து வரும் ரஷித் கான், தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை கனக் கச்சிதமாக அடித்து அசத்தியுள்ளார். அந்த வீடியோ அவரது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.
ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் போட்டி போன்று, 10 ஓவர்கள் மட்டுமே வீசப்படும் டி-10 லீக் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மராத்தா அரேபியன்ஸ் அணிக்காக ரஷித் கான் விளையாடி வருகிறார். ஷார்ஜாவில் நடந்த பாக்டூன்ஸ் அணிக்கு எதிரான போட்டி ஒன்றில் 10 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் ரஷித் கான், 7 பந்துகளில் தலா 2 சிக்சர்கள் மற்றும் பவுண்டரிகள் உதவியுடன் 21 ரன்கள் விளாசினார்.
10 ஓவர்களில் 125 ரன்கள் குவித்தது. ரஷித்கான் 7 பந்தில் 21 ரன்கள் குவித்தார். பின்னர் ஆடிய பக்தோன்ஸ் அணி 126 ரன்களை 19.2 ஓவர்களில் கடந்து வெற்றி பெற்றது. ஆனாலும் ரஷித்தின் ஹெலிகாப்டர் ஷ்ஹாட் எல்லாராலும் பேசப்பட்டது.
இதற்கு முன்னர் ஆப்கான் வீரர் முகமது ஷெஷாத்தின் 16 பந்தில் 76 ரன்கள் பிரபலமாக பேசப்பட்டது. டி10 லீக்கில் ஆப்கான் வீரர்கள் சிறப்பாக ஆடி உலகின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானின் பிரபல வீரரான ரஷித்கான் ஷார்ஜாவில் டி10 போட்டிகளில் ஆடிவருகிறார். இந்த போட்டியில் மராத்தா அரபியன்ஸ் அணிக்காக ஆடிய ரஷித் கான், ஆட்டத்தின் 10வது ஓவரின் முதல் பந்தில் அபாரமான சிக்ஸர் ஒன்றை விளாசினார். அது இந்திய முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனியின் ”ஹெலிகாப்டர் ஷாட்” போல் அமைந்தது.
இதனை பெவிலியனில் இருந்தபடி பார்த்த இந்திய அணியின் அதிரடி வீரரும், மராத்தா அரேபியன்ஸின் கேப்டனுமான விரேந்தர் சேவாக் எழுந்து நின்று கைதட்டி வாழ்த்தினார். இர்ஃபான் பந்தை சிக்சர் அடித்த ரஷித்கானை மொத்த மைதானமும் ஆச்சர்யமாக பார்த்தது.
குறைந்த ஓவர்கள் போட்டியில் பேட்ஸ்மேன்கள் எத்தனையோ ஷாட்களை அடித்தாலும், ‘தல’ தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டுக்கு மவுசு குறையாமல் உள்ளது.
?????? #Helicopters #Inventer @msdhoni Bhai ?????? @T10League @MarathaArabians pic.twitter.com/DH8RdfUnYA
— Rashid Khan (@rashidkhan_19) November 29, 2018