உங்கள் கிரிக்கெட் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது, ஆனால் என் சிறிய ஆலோசனை இதுதான் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு கேப்டன் கோலி ஆலோசனை வழங்கியுள்ளார்.
கோலி தெரிவித்துள்ளதாவது:
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் விளையாட வந்ததிலிருந்து மிகச்சிறப்பான வளர்ச்சியடைந்து வருகின்றது. உங்கள் திறமையால் டெஸ்ட் போட்டி விளையாடும் தகுதி பெற்றது மகிழ்ச்சி. வரும் 20ம் தேதி ஹாங்காங் அணியுடன் 4 நாள் டெஸ்ட் போட்டியில் விளையாட ஹாங்காங் சென்றுள்ளது ஆப்கானிஸ்தான் அணி.
ஆப்கானிஸ்தான் அணி குறித்து கோலி பேசும் போது, “உங்களின் கிரிக்கெட் விளையாடும் பேரார்வம் உங்களை தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அளவுக்கு கொண்டுவந்துள்ளது. உங்களின் வளர்ச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நான் விளையாடிய கிரிக்கெட்டில் என் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் காரணமாக சிலவற்றை நான் கூற விரும்புகிறேன். என் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, அணியின் ஒட்டுமொத்த முயற்சி என் வலிமையாக உள்ளது.
உங்களுக்கென தனி படைப்பாற்றல், ஆக்கத்திறனை காட்டுங்கள் அதன் மூலம் உங்களுக்கான அடையாளத்தை உருவாக்குங்கள். உங்களை சுற்றியுள்ள ரசிகர்களை மகிழ்விக்க அனைத்து முயற்சிகளையும் செய்யுங்கள்.” என கோலி கூறியுள்ளார்.