மீண்டும் ஒருமுறை சுழல் பந்துவீச்சாளரிடம் எளிதாக ஆட்டம் இழந்தார் விராட் கோலி. இதன் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல்நாள் முடிவில் 77 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்திருந்தது. ரோகித் சர்மா 56 ரன்களுடனும் ரவிச்சந்திரன் அஸ்வின் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி முதல் ஒரு மணி நேரம் மிகவும் நிதானமாக ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை எதிர்கொண்டது. அதன் பிறகு பௌலிங் செய்ய வந்த டாட் மர்பி ரவிச்சந்திரன் அஸ்வின் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்ததாக புஜாராவின் விக்கெட்டையும் இவரே வீழ்த்தினார்.
உணவு இடைவேளைக்கு முன்பு 151 ரன்கள் மூன்று விக்கெடுகளை இந்திய அணி இழந்திருந்தது. அப்போது களத்தில் விராட் கோலி 12 ரன்களுடனும் ரோகித் சர்மா 85 ரன்களுடனும் இருந்தனர்.
உணவு இடைவேளைக்கு பின்பு உள்ளே வந்த விராட் கோலி முதல் ஓவரை எதிர்கொண்டார். அந்த ஓவரை டாட் மர்பி வீச, விராட் கோலி அடிக்க முயற்சித்த போது முதல் பந்திலையே துரதிஷ்டவசமாக அவுட் ஆகினார்.
விராட் கோலி-க்கு சமீப காலமாக ஸ்பின்னர்களுக்கு எதிராக சிக்கல் இருந்திருக்கிறது. அதிலும் டெஸ்ட் போட்டிகளில் ஆஸி., ஸ்பின்னர் நேதன் லயன் விராட் கோலியை அதிகமுறை விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். முதல் டெஸ்டிலும் தொடர்ந்து தாக்குதலை ஏற்படுத்தினார்.
நேதன் லயன் பந்தை நேர்த்தியாக எதிர்கொண்டு விராட் கோலி விளையாடினார். ஆனால் துரதிஷ்டவசமாக டாட் மர்பி பந்தில் ஆட்டம் இழந்தார். இதனால் விராட் கோலிக்கும் ஸ்பின்னர்களுக்கும் இடையிலான சாபம் இன்னும் நீங்கவில்லை என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.