முகமது ஷமியின் செல்லப்பெயர் லால்ஜி என யுஜவேந்திர சகால் கூறியுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று, இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. கேப்டன் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் அரைசதம் அடித்து அசத்தினர்.
இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. நேப்பியரில் நடந்த முதலாவது போட்டியில் இந்திய அணி, அபார வெற்றி பெற்றது. மவுன்ட் மாங்கனுயி-ல் நடந்த இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்றதையடுத்து இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது.
இந்நிலையில் மூன்றாவது போட்டி, மவுன்ட் மாங்கனுயி-ல் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அந்த அணி 49 ஓவர் முடிவில் 243 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அந்த அணியில் டெய்லர் 93 (106), லாதம் 51 (64) ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். சாஹல், ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இதனையடுத்து, 244 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியில், பவுண்டரிகள் விளாசி தவான சிறப்பான தொடக்கம் தந்தார். இருப்பினும், 28 (27) ரன்னில் அவர் ஆட்டமிழந்தார். பின்னர், ரோகித் ஷர்மாவும், கேப்டன் விராட் கோலியும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ரோகித் 63 பந்திலும், விராட் கோலி 59 பந்திலும் அரைசதம் அடித்தனர். சிறப்பாக விளையாடிய ரோகித் 62 (77), கோலி 60 (74) ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து, ராயுடு, தினேஷ் கார்த்திக் ஜோடி நெருக்கடி இன்றி ரன்களை சேர்த்தது. இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினர். இதனால், இந்திய அணி 43 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராயுடு 40 (42), தினேஷ் 38 (38) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் ஆசியாவுக்கு வெளியே இந்தியா வென்றுள்ள மூன்றாவது ஒருநாள் தொடர் இதுவாகும். தோனிக்கு பதிலாக களமிறக்கப்பட்ட தினேஷ் சிறப்பாக விளையாடி 38 ரன்கள் சேர்த்தார். கடைசியில் எவ்வித பதட்டமும் இல்லாமல் ராயுடு-தினேஷ் ஜோடி போட்டியை வெற்றி பெறச் செய்தது.
போட்டியின் ஆட்டநாயகன் விருது, 3 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஷமிக்கு கொடுக்கப்பட்டது.
CHAHAL TV: On our brand new episode of Chahal TV, we get in touch with India pacer @MdShami11. What is Shami's nickname in the side? @yuzi_chahal finds out ?? #TeamIndia – by @RajalArora
Video Link ▶️?? https://t.co/CF6BNUUe1N pic.twitter.com/1iZXuXxK1S
— BCCI (@BCCI) January 28, 2019