வீடியோ: தனது அப்பாவிற்காக இங்கிலாந்து மைதானத்திற்கு வந்து ஷியர் செய்த ஸிவா! 1
இதில் லீக் சுற்று முக்கியமான கட்டத்தை எட்டியிருப்பதால் ஒவ்வொரு நாளும் போட்டி மீதான ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது.
மான்செஸ்டரில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியன்களான இந்தியாவும், வெஸ்ட் இண்டீசும் கோதாவில் குதித்தன.   போட்டியில் டாஸ் வென்ற  இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முடிவில் இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 268 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சார்பில் கெமார் ரோச் 3 விக்கெட்களும், அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் மற்றும் ஷெல்டன் காட்ரெல் தலா 2 விக்கெட்களும் எடுத்தனர். வீடியோ: தனது அப்பாவிற்காக இங்கிலாந்து மைதானத்திற்கு வந்து ஷியர் செய்த ஸிவா! 2
இதைதொடர்ந்து  269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ்  அணி 34.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. வெஸ்ட் இண்டீஸ்  அணியில் அதிகபட்சமாக சுனில் அம்ப்ரிஸ் 31 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 28 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணியில் அதிகபட்சமாக கோலி 72, தோனி 56, ராகுல் 48 பாண்டியா 46 ரன்கள் சேர்த்தனர். உலக கோப்பை தொடரில், 5-வது வெற்றியை இந்திய அணி  பதிவு செய்துள்ளது. உலககோப்பை தொடரிலிருந்து வெஸ்ட் இண்டீஸ்  அணி வெளியேறியது.

போட்டி முடிந்த பிறகு பரிசளிப்பு விழாவில் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, மூத்த வீரர் டோனிக்கு ஆதரவாக பேசினார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மந்தமாக விளையாடி கடும் விமர்சனத்துக்கு டோனி, உள்ளாக்கப்பட்ட நிலையில்,  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பொறுப்பாக விளையாடி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

 

View this post on Instagram

What a day ! #babiesdayout

A post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on

 

 

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பரிசளிப்பு விழாவில் பேசியதாவது:- “ நடு வரிசையில், தான் என்ன செய்ய வேண்டும் என்பதை டோனி உணர்ந்து இருக்கிறார்.  ஒரே ஒரு ஆட்டம் டோனிக்கு மோசமானதாக அமைந்தால், உடனடியாக அனைவரும் பேச  துவங்கி விடுகின்றனர். ஆனால், நாங்கள் எப்போதும் அவருக்கு ஆதரவாக இருக்கிறோம்.
பல போட்டிகளில் எங்களுக்கு டோனி வெற்றியைத் தேடி தந்துள்ளார்.  டோனியின் அனுபவம் 10-ல் 8 முறை எங்களுக்கு நல்லதாகவே முடிந்துள்ளது. ஆட்டத்தை புரிந்து கொள்வதில் டோனி வல்லவர்.  எங்களுக்கு எப்போதும் ஆலோசனைகளை வழங்கிக் கொண்டே இருப்பார்.  ஆட்டத்தில் டோனி ஒரு லெஜண்ட். நாங்கள் அனைவரும் அதை அறிவோம்” என்றார்.

 

 

 

View this post on Instagram

Go India !

A post shared by ZIVA SINGH DHONI (@ziva_singh_dhoni) on

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *