பொதுவாக இந்திய அணியின் வீரர்கள் வெளிநாடுகளில் நடக்கும் எந்த ஒரு தொடரிலும் விளையாட அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், இந்திய மகளிர் அணியின் வீராண்கணைகளுக்கு வாய்ப்பு வரும் போது அதனை தட்டிக்கழிப்பதும் இல்லை பி.சி.சி.ஐ.
ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 லீக்கான மகளிருக்காக பிக் பாஸ் லீக் தொடரில் இந்தியாவில் இருந்து முதன் முதலாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் ஹர்மன்ப்ரீத் கவுர். தற்போது அந்த ஒப்பந்தம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 9ஆம் தேதி துவங்கவுள்ள மகளிர் பிக் பாஸ் லீக்கில் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.
சர்வதேச போட்டிகளில் இந்திய அணியின் மிடில் ஆடர் பேட்ஸ்மேனாக ஆடி வரும் ஹர்மன்ப்ரீத் தற்போது உள்ள வீரராங்கனைகளில் அதிரடி வீரராக வலம் வருகிறார். சிட்னி தண்டர் அணிக்காக முதன் முதலாக ஆடிய அவர் மொத்தம் 296 ரன் குவித்து அசத்தினார். 117 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிய அவரது ஆட்டத்தின் சராசரி 59.2 ஆகும். மேலும், அந்த வருடத்தில் அவருடைய அணியின் இரண்டாவது அதிகபட்ச ரன் அடித்த வீராங்கணை ஆனார்.

மேலும், சமீபத்தில் நடந்த மகளிர் உலகக்கோப்பையில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. இதில் செமி பைனலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடியாக 115 பந்துகளுக்கு 171 ரன் குவித்து அனைவரியயும் ஆச்சரியப்படுத்தினார். இதன் பிறகு அனைத்து டி20 அணிகளும் தேடும் ஒரு வீராங்கணையாக மாறினார் ஹர்மன். இதனால் அவரது தேவையை உணர்ந்த சிட்னி தண்டர்ஸ் அணி அவரை மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பத்தம் செய்துள்ளது.
இது குறித்து சிட்னி தண்டர்ஸ் அணியின் மேளாலர் லீ ஜெர்மன் கூறியதாவது,
அவர் ஒரு மேட்ச் வின்னர், டி20 போட்டிகளுக்கு அவர் போன்ற வீராங்கணை தான் அணிக்கு தேவை. அதிரடியாக ஆடும் திறமை அவரிடம் உள்ளது. சரியாக டி20 போட்டியில் ஆடுவது போல் தற்போது ஆடி வருகிறார். ஒரு ஓவருக்கு 10 முதல் 12 ரன் அடிக்க முடியுமானால் அவரால் அணியை வெற்றிப்பதைக்கு அழைத்துச் செல்ல முடியும்.
இதனால் ஹர்மனை இன்னும் இரண்டு ஆடுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக தெர்வித்தார் அவர்.
தற்போது 28 வயதான் ஹர்மன்ப்ரீத்தை தொடர்ந்து, ஸ்மிரிதி மந்தனா மற்றும் வேதா கிரிஷ்னமூர்த்தி ஆகியோர் இந்த மகளிர் பிக் பாஸ் லீக்கில் ஒப்பதம் செய்யப்பரட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.