2019 உலககக் கோப்பைப் போட்டியின் லீக் சுற்று முடிவடைய இன்னும் ஆறு நாள்களே உள்ளன. எல்லா அணிகளுக்கும் ஓரிரு ஆட்டங்களே மீதமுள்ளன. இந்நிலையில் பேட்ஸ்மேன்களுக்குச் சமமாகப் பந்துவீச்சாளர்களும் இந்தப் போட்டியில் அசத்தி வருகிறார்கள். இதுவரையிலான அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியல்:
அதிக ரன்கள்

இந்த உலகக் கோப்பைப் போட்டியில் மூன்று சதங்கள் அடித்த ஒரே வீரர், ரோஹித் சர்மா. ஆனால் அவரால் டாப் 5 பட்டியலில் இடம்பிடிக்கமுடியவில்லை. அவருக்குத் தற்போது 6-ம் இடமே (440 ரன்கள்) கிடைத்துள்ளது. 382 ரன்களுடன் கோலி 7-ம் இடத்தில் உள்ளார்.
| எண் | வீரர் | இன்னிங்ஸ் | ரன்கள் | சதங்கள் | அரை சதங்கள் | சிக்ஸர் |
| 1. | டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) | 8 | 516 | 2 | 3 | 6 |
| 2. | ஃபிஞ்ச் (ஆஸ்திரேலியா) | 8 | 504 | 2 | 3 | 18 |
| 3. | ஷகிப் அல் ஹசன் (வங்கதேசம்) | 6 | 476 | 2 | 3 | 2 |
| 4. | ரூட் (இங்கிலாந்து) | 8 | 476 | 2 | 3 | 2 |
| 5. | வில்லியம்சன் (இங்கிலாந்து) | 6 | 454 | 2 | 1 | 3 |
அதிக விக்கெட்டுகள்

3 ஆட்டங்களே விளையாடினாலும் டாப் 5 பட்டியலில் இடம்பிடித்துவிட்டார் ஷமி. ஸ்டார்க் போல 8 ஆட்டங்களில் விளையாடியிருந்தால் எத்தனை விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பாரோ?
| எண் | வீரர் | இன்னிங்ஸ் | விக்கெட்டுகள் | 5 விக்கெட்டுகள் | எகானமி |
| 1. | ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) | 8 | 24 | 2 | 5.01 |
| 2. | ஃபெர்குசன் (நியூஸிலாந்து) | 7 | 17 | 0 | 4.96 |
| 3. | முகமது அமிர் (பாகிஸ்தான்) | 7 | 16 | 1 | 4.95 |
| 4. | ஆர்ச்சர் (இங்கிலாந்து) | 8 | 16 | 0 | 5.01 |
| 5. | ஷமி (இந்தியா) | 3 | 13 | 1 | 4.77 |
இந்தியா-இங்கிலாந்து அணிகள் நேற்று பர்மிங்காமில் நடைபெற்ற போட்டியில் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஜெசன் ராய்(66), பாரிஸ்டோவ்(111), ஸ்டோக்ஸ்(79) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 337 ரன்கள் குவித்தது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் சற்று தடுமாறியது. பின்னர் ஒரளவு நிலைத்து ஆட முற்பட்டது. இறுதியில் 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 306 ரன்கள் குவித்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தப் போட்டியை நேற்று நேரில் காண கூகுள் நிறுவன சிஇஒ சுந்தர் பிச்சை நேரில் வந்துள்ளார். இது தொடர்பான நிழற்படத்தை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில். “இன்றைய போட்டியில் கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை மற்றும் சச்சின் ஆகிய இருவரும் ஒன்றாக மைதானத்தில் இருந்தனர்” எனப் பதிவிட்டுள்ளது.
முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுந்தர் பிச்சை, “இந்த உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்தியா-இங்கிலாந்து விளையாடவேண்டும் என்று நான் விரும்புகிறேன். என்னுடைய இளம் வயதில் நான் கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. அப்போது நான் சுனில் கவாஸ்கர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை எனது முன்னுதாரணமாக கொண்டிருந்தேன்” எனக் கூறியிருந்தார்.