இங்கிலாந்து
சொந்த மண்ணிலேயே தொடர் நடைபெற இருப்பதால், இங்கிலாந்து அணி வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பாக உள்ளது. ஜோப்ரா ஆர்சர், டி 20 போட்டிகளில் கலக்கிவிட்டு தற்போது ஒருநாள் போட்டிகளில் சிறந்த பந்துவீச்சை காட்ட உள்ளார். அனுபவம் மிக்க லியாம் பிளங்கெட், அணியின் வெற்றிக்கு பெரும்பங்காற்றிவருகிறார். இவர்களை தவிர்த்து டாம் குரான், கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ் மற்றும் மொயீன் அலி உள்ளிட்டோரும் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.