கேன் வில்லியம்சன் மாதிரி பிளேயரோட அருமை தெரியாம இருக்கானுங்க.. முட்டாளுங்க – ஆஷிஷ் நெக்ரா பேட்டி!

கேன் வில்லியம்சன் எந்த இடத்தில் களமிறக்க உள்ளோம்? எப்படி பயன்படுத்த உள்ளோம்? என்று பேட்டியளித்திருக்கிறார் ஆஷிஷ் நெக்ரா.

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான சிறிய அளவிலான ஏலம் கொச்சியில் கடந்த 23ஆம் தேதி நடத்தப்பட்டது. இதில் பல வீரர்கள் எதிர்பார்த்ததை விட பல கோடி ரூபாய்க்கு சென்றனர். சில வீரர்களை ஆரம்ப விலைக்கு எடுப்பதற்கே அணிகள் முன்வரவில்லை. இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

எதிர்பார்க்கப்பட்டபடி சாம் கர்ரன் கேமரூன் கிரீன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகிய வெளிநாட்டு ஆல்ரவுண்டர்கள் அதிகபட்ச விலைக்கு சென்றனர். இதில் பலரும் ஆச்சரியப்பட்டது என்னவென்றால், கேன் வில்லியம்சன் போன்ற வீரரை ஆரம்ப விலைக்கு எடுப்பதற்கே பல அணிகள் முன் வரவில்லை. கடைசியாக குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை 2 கோடி ரூபாய்க்கு எடுத்தது.

கேன் வில்லியம்சன், அனுபவமிக்க பேட்ஸ்மேன், நிலைத்து ஆடக்கூடியவர் மற்றும் கேப்டன் பொறுப்பில் அதீத அனுபவம் மிக்கவர். இவருக்கு இப்படி நேர்ந்தது சற்று ஏமாற்றத்தையும் கொடுத்தது. ஆனால் கடைசியில் குஜராத் டைட்டன்ஸ் எடுத்தது சற்று ஆறுதலாக இருந்தது.

குஜராத் அணியில் அனைத்து இடங்களுக்கும் வீரர்கள் ஏற்கனவே இருக்கையில், எதற்காக கேன் வில்லியம்சனை எடுக்க வேண்டிய அவசியம் என்ன? எங்கு ஆடவைப்பார்கள்? என்ற பல கேள்விகள் முன்வைக்கப்பட்டது. இதற்கு அந்த அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெக்ரா பதில் கொடுத்திருக்கிறார்.

 

“கேன் வில்லியம்சன் தன்னை நிரூபணமான வீரர். அதீத அனுபவம் பெற்றவர். இவரது அனுபவம் அணிக்கு கிடைத்தால் இன்னும் பல மடங்கு பலமாக இருக்கும். குறிப்பாக இளம் வீரர்களுக்கு இவரை போன்ற அனுபவம் மிக்க வீரர்களின் அறிவுரைகள் உதவியாக இருக்கும். இவரை 3வது இடத்தில் இறக்க திட்டமிட்டு வருகிறோம். எங்களது அணி அனுபவம் மற்றும் இளமை இரண்டும் கலந்த அணியாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம். இளம் வீரர்கள் பலர் இருக்கின்றனர். தற்போது கேன் வில்லியம்சன் போன்ற அனுபவம் மிக்க வீரர் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி.

குஜராத் அணியை பொறுத்தவரை, கேப்டன் ஒருவராக இருந்தாலும் இது ஒட்டுமொத்த அணியாக செயல்படும் அணி. ஒவ்வொருவரின் கருத்தும் இங்கு கேட்கப்படும். அதில் கேன் வில்லியம்சன் இருப்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பினோம். எடுத்தோம்.” என்றார்.

Mohamed:

This website uses cookies.