உங்க குடும்ப பிரச்சனைல நாங்க தலையிட முடியாது, அத நீங்களே தீத்துகோங்க : சமி மனைவியிடம் பிசிசிஐ கறார்.... 1

கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் குடும்ப விவகாரத்தில் தலையிட முடியாது என அவர் மனைவியிடம் கூறிவிட்டதாக பிசிசி ஐ-ன் செயல் தலைவர் சிகே. கண்ணா தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது, அவர் மனைவி ஹசின் ஜஹான் பல்வேறு குற்றச்சாட் டுகளை முன்வைத்தார். ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பிருப்பதாகவும் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் நேரம் செலவழிப்பதாகவும் அவர் தனது முகநூல் பக்கத்தில் ஆதாரங்களுடன் தெரிவித்தார்.

உங்க குடும்ப பிரச்சனைல நாங்க தலையிட முடியாது, அத நீங்களே தீத்துகோங்க : சமி மனைவியிடம் பிசிசிஐ கறார்.... 2

‘ஷமி, பாகிஸ்தானை சேர்ந்த அலிஷாப் என்ற பெண்ணிடம் பணம் வாங்கியுள்ளார். இங்கிலாந்தில் இருக்கும் முகமது பாயின் வலியுறுத்தலின் பேரில் அதைப் பெற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டார். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது’ என்ற குற்றச் சாட்டையும் முன்வைத்தார்.

உங்க குடும்ப பிரச்சனைல நாங்க தலையிட முடியாது, அத நீங்களே தீத்துகோங்க : சமி மனைவியிடம் பிசிசிஐ கறார்.... 3

இந்த சர்ச்சையால் இந்தாண்டுக்கான பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்ததில் ஷமியின் பெயர் இடம்பெறா மல் நிறுத்தி வைக்கப்பட்டது. முகமது ஷமி மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டாரா என்பது குறித்து பிசிசிஐ விசாரணை மேற்கொண் டது. ஷமி மீதான ஸ்பார்ட் பிக்ஸிங் புகாரில் எந்த முகாந்திரம் இல்லை என கூறி பிரச்னையை பிசிசிஐ முடித்துவிட்டது. மேலும், கிரேட் ‘பி’-யில் விளையாடவும் ஒப்பந்தம் செய்தது. இதனால் ஏப்ரல் 7ம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரில் விளை யாடுவதற்கு இருந்த சிக்கல் நீங்கியுள்ளது. டெல்லி டேர்டெவில்ஸ் அணி சார்பில் அவர் விளையாடுகிறார்.

உங்க குடும்ப பிரச்சனைல நாங்க தலையிட முடியாது, அத நீங்களே தீத்துகோங்க : சமி மனைவியிடம் பிசிசிஐ கறார்.... 4
இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்த ஷமியின் மனைவி, இந்த விவகாரத்தில் இந்திய கிரிக் கெட் வாரியம் தலையிட வேண்டும் என்று கூறியிருந்தார். இதுபற்றி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயல் தலைவர் சி.கே.கண்ணா கூறும்போது, ‘ஷமியின் குடும்ப விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. ஹசின் ஜஹான் என்னை சந்தித்து இந்த கோரிக்கையை வைத்தார். இது உங்கள் குடும்ப பிரச்னை. தனிப்பட்ட பிரச்னை. இதை குடும்பத்துக்குள் தீர்த்துக்கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டேன்’ என்றார்.

முகமது ஷமி

முகமது ஷமி மீது மேட்ச் பிக்ஸிங் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை அவரின் மனைவி ஹாசின் ஜஹான் முன்வைத்தார். பாகிஸ்தானைச் சேர்ந்த அலிஷ்பா என்ற பெண்மணி மூலமாக முகமது பாய் என்பவரிடமிருந்து ஷமி பணம் பெற்றதாகவும் ஜஹான் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், தன்னைக் கொலை செய்ய முயன்றார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை ஷமி மீது அவரது மனைவி கூறியிருந்தார். இதுதொடர்பாகக் கொல்கத்தா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உங்க குடும்ப பிரச்சனைல நாங்க தலையிட முடியாது, அத நீங்களே தீத்துகோங்க : சமி மனைவியிடம் பிசிசிஐ கறார்.... 5
Indian cricketer Mohammed Shami leaves after batting in the nets during a training camp at National Cricket Academy in Bangalore, India, Friday, July 1, 2016. The Indian team is scheduled to travel to West Indies to play four match test series starting July 21. (AP Photo/Aijaz Rahi)

மனைவியின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து வீரர்களுக்கான வருடாந்தர ஒப்பந்தப் பட்டியலில் ஷமியின் பெயரை பி.சி.சி.ஐ சேர்க்கவில்லை. இதுதொடர்பாக ஊழல் தடுப்புப் பிரிவின் தலைவர் நீரஜ் குமார் தலைமையில் நடந்த விசாரணையில் ஷமி குற்றமற்றவர் என தெரியவரவே, அவர் `பி’ கிராடு ஒப்பந்தத்தின் கீழ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதேபோல் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் ஷமி பங்கேற்கலாம் எனவும் பிசிசிஐ பச்சைக்கொடி காட்டியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *