எங்களுக்கு இது 200வது போட்டி… ஆனா எவனாவது எங்கள மதிக்கிறானா பாருங்க… எல்லாத்துக்கும் இவர் தான் காரணம்; சஞ்சு சாம்சன் ஓபன் டாக் !!

எங்களுக்கு இது 200வது போட்டி… ஆனா எவனாவது எங்கள மதிக்கிறானா பாருங்க… எல்லாத்துக்கும் இவர் தான் காரணம்; சஞ்சு சாம்சன் ஓபன் டாக்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

16வது ஐபிஎல் தொடரின் 37வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி வருகின்றன.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இது 200வது போட்டியாகும். 200வது போட்டியில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஊக்குவிப்பதற்காக கூடிய ரசிகர்களை விட, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களே மைதானத்தில் பல மடங்கு அதிகமாக உள்ளனர்.

இந்தநிலையில், இது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனே ஓபனாக பேசியுள்ளார்.

இது குறித்து சஞ்சு சாம்சன் பேசுகையில், இது எங்களுக்கு 200வது போட்டியாகும். ராஜஸ்தான் அணியின் 200வது போட்டியில் விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அதே போல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 10 வருடங்களாக விளையாடி வருவதும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்த போட்டி எங்களுக்கு சிறப்பு வாய்ந்த போட்டி என்பதால் மைதானத்தில் எங்கள அணி நிற ஜெர்சி அணிந்த ரசிகர்களை காண விரும்பினோம், ஆனால் எங்கு திரும்பினாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களே உள்ளது போன்றுள்ளது, இது அனைத்திற்கும் என்ன காரணம் என்பது நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை என சிரிந்து கொண்டே பேசினார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் (பிளேயிங் லெவன்):

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், தேவ்தத் பாடிக்கல், சஞ்சு சாம்சன்(கேப்டன்), ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், ஆடம் ஜம்பா, சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.

சென்னை சூப்பர் கிங்ஸ் (பிளேயிங் லெவன்):

ருத்துராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி (கேப்டன்), மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா, ஆகாஷ் சிங்.

Mohamed:

This website uses cookies.