நான் பேட்டிங் பயிற்சியே எடுக்கல பாஸ்.... ஒரே செஷனில் சதம் அடித்துவிட்டு அசால்ட்டாக பதில் சொல்லும் சிகர் தவான் 1

இன்று ஆப்கானுக்கு எதிரான வரலாற்று டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளைக்கு முன்னதாக சதம் எடுத்து ஷிகர் தவண் இந்தச் சாதனையை நிகழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

ஆனால் இதே சாதனையை அதிரடி தொடக்க வீரர் சேவாக் 3 முறை செய்திருப்பார், ஆனால் மூன்று முறையும் தவறவிட்டுள்ளார்.

மே.இ.தீவுகளுக்கு எதிராக 2006-ல் விரேந்திர சேவாக் கிராஸ் ஐஸ்லெட்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளைக்கு முன்பாக 99 ரன்கள் எடுத்தார், ஒரு ரன்னை எடுக்காததற்குக் காரணம் தனக்கு அப்படியொரு சாதனை இருப்பதை யாரும் கூறவில்லை என்றார் சேவாக்.நான் பேட்டிங் பயிற்சியே எடுக்கல பாஸ்.... ஒரே செஷனில் சதம் அடித்துவிட்டு அசால்ட்டாக பதில் சொல்லும் சிகர் தவான் 2

ஆனால் 2008-ல் இலங்கைக்கு எதிராக கால்லேயில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சச்சின், லஷ்மண் திராவிட் எல்லோரும் அஜந்தா மெண்டிஸிடம் மண்ணைக்கவ்வ விரேந்திர சேவாக் மட்டும் ஒருமுனையில் நின்று இரட்டைச் சதம் நாட் அவுட் ஆனார், அது விரைவு இரட்டைச் சதம் என்பதோடு சேவாக் தொடக்கத்தில் இறங்கி நாட் அவுட்டாகத் திகழ்ந்தார், அந்த இன்னிங்சில் சேவாக் உணவு இடைவேளைக்கு முன்னதாக 91 நாட் அவுட். இந்தமுறையும் சேவாக் உணவு இடைவேளைக்கு முன்னதான சதச் சாதனையைத் தவறவிட்டார்.

மூன்றாவது முறை 2010-11 நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அகமாதாபாத்தில் 87 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார் சேவாக். ஆகவே 3 முறையும் நாட் அவுட், ஆனால் உணவு இடைவேளைக்கு முன்னதாக சதமெடுக்கும் வாய்ப்பு கைகூடாமல் போனது சேவாகுக்கு.நான் பேட்டிங் பயிற்சியே எடுக்கல பாஸ்.... ஒரே செஷனில் சதம் அடித்துவிட்டு அசால்ட்டாக பதில் சொல்லும் சிகர் தவான் 3

இந்தியாவின் மற்றொரு அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் ஃபரூக் இன்ஜினியர் 1966-67-ல் சென்னை டெஸ்ட் போட்டியில் பயங்கர பவுலிங் மே.இ.தீவுகளுக்கு எதிராக உணவு இடைவேளைக்கு முன் 94 நாட் அவுட் என்று இருந்துள்ளார்.

ஷிகர் தவண் ஒரு செஷனில் 100–கும் மேல் ரன்கள் எடுப்பது இது 3வது முறையாகும் டான் பிராட்மேன் 6 முறை இவ்வாறு செய்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.

இந்த ஆட்டம் குறித்து சிகர் தவானிடம் கேட்ட போது ஆவாட் கூறியதாவது…

ஒரே செசனில் சதம் அடிப்பது மிக மகிழ்வாக உள்ளது. இது அவ்வளவு பெரிய ஒரு வேலை. ஒரே செசனில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் நான்தான் என்கிறார்கள். இது எனக்கு தெரியவில்லை.

காலையில் வந்து ஆடுகளத்தை பார்த்தேன், சற்று ஈரப்தமாக இருந்தது. அதனால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவும் என நினைத்தேன்.

சரியான வேலையை செய்தேன், அது எனக்கு காய் கொடுத்தது. பேட்டிங்கில் அதிக பயிற்சி எடுக்கவில்லை. ஏனெனில் பிட்னஸ் டெஸ்ட் இருந்தது. பேட்டிங்கை விட்டுவிட்டு அதற்காக பயிற்சி செய்து கொண்டிருந்தேன். அதனால் பேட்டிங் பயிற்சி எடுக்கவில்லை.நான் பேட்டிங் பயிற்சியே எடுக்கல பாஸ்.... ஒரே செஷனில் சதம் அடித்துவிட்டு அசால்ட்டாக பதில் சொல்லும் சிகர் தவான் 4

ஏனேனில் அதிக பயிற்சி எடுத்து என்னை களைப்படைய வைத்துக்கொள்ள விரும்பவில்லை. பின்னர் ஆடுகளத்திற்குள் சென்றவுடன் எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த துவங்கினேன். அது எனக்கு கை கொடுத்தது.

தற்போது நல்ல ஸ்கோர் அடித்துள்ளோம். நாளை அவர்களது விக்கெட்டுகளை எடுக்க முயல்வோம்..

இவ்வாறு கூறினார் தவான்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *